ஆகஸ்ட் 24, சிவகாசி (Virudhunagar News): தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் நடந்து முடிந்தது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு வெற்றி பெற்றதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், மக்களை சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கவிட்டது, ரேம்ப்வாக் என்ற பெயரில் மேடை நாகரீகம் இன்றி நடந்துகொண்டது என கடும் விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டுள்ளார். விமர்சனங்களை பாடமாக ஏற்று முன்னேற்றத்துக்கு வழிவகை செய்வோம் என விஜய் கூறினாலும், அவரை பார்க்க வந்த தொண்டர்கள் படை விஜயின் பேச்சு வரை கூட காத்திருக்காமல் ரேம்பவாக் முடிந்ததும் புறப்பட்டது விஜயின் மீதான நடிகர் பார்வையை தொண்டர்கள் மாற்றாமல் வைத்திருப்பதை உறுதி செய்தது. அரசியல் சார்ந்து விஜய் பேசும்போது அதிமுகவை கடுமையாக சாடி இருந்தார். எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி இன்று இருக்கும் நிலை என்ன?அதை மீட்டெடுக்க வேண்டும் என கூறியவர், திமுக, பாஜக கட்சிகளையும் கண்டித்து இருந்தார். மின்வாரிய அதிகாரிகளின் 100% அலட்சியம்.. சென்னை தூய்மை பணியாளர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் குமுறல்.!
அதிமுக ராஜேந்திர பாலாஜி பேட்டி (AIADMK KT Rajendra Balaji Latest Speech News):
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "அவர் விளையாட்டுப்பிள்ளையாக இருக்கிறார் என்பதை அடையாளப்படுத்தும் வகையிலேயே மதுரை மாநாடு அமைந்தது. ஒரு பொதுவான அரசியல் இயக்கம் என்ற ஆற்றல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், தலைவர்களிடம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தினமும் ஒரு மாநாடு நடத்துகிறார். எங்களைப்பார்த்து அவர்கள் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது விஜயின் வீழ்ச்சிக்கான முதல்படி ஆகும். எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா வலுவான தலைவராக வந்தார். அம்மாவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். மக்களை காக்காவும், தமிழகத்தை மீட்கவும் என்ற பயணத்தால் மு.க. ஸ்டாலினின் திமுகவே மிரண்டு உள்ளது. தேர்தலில் தவெக - திமுக இடையே போட்டி என வாயால் சொல்லலாம். அது பொறாமை வசனம். அவரின் நாடக கச்சேரி 2 நாட்களுக்கு முன்னே முடிந்துவிட்டது. அவரின் பேச்சில் அரசியல் கருத்தும், மக்களை கவரும் எதிர்கால திட்டமும் இல்லை" என கூறினார்.