மே 27, கல்யாண் (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் மதுபோதையில் இயக்கிய கார் ஒன்று 2 ஐடி நிறுவன ஊழியர்களின் உயிரை பறித்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி சிறார்களை வாகனம் இயக்க அனுமதிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பேரனை காப்பாற்ற முயன்று, சட்டவிரோத செயலை மேற்கொண்ட தாத்தாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மும்பை கல்யாண், சிவாஜி சௌக் பகுதியில் 17 வயது சிறுவன் தனது தந்தையின் காரை இயக்கினார். அவர் தனது பிஎம்டபிள்யு காரின் பென்னட்டில் ஒருவரை அமரவைத்து அங்கும்-இங்குமாக வீதிஉலா வந்தார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வழக்கை சந்திக்கவே, காவல் துறையினர் சர்ச்சைக்குரிய நபரை கைது செய்தனர். Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!
View this post on Instagram
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)