ஏப்ரல் 18, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லாரி ஓட்டுனர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக லாரியின் பக்கவாட்டில் ஏறி உயிர்தப்பினார். வாகனத்தை தொடர்ந்து லாரி ஓட்டுனர் இயக்கியதால், இருசக்கர வாகனம் தீப்பொறிகளை கிளப்பியவாறு சில மீட்டர் தூரம் பயணித்து சுக்குநூறாக உடைந்து போனது. இந்த விஷயம் தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர், கார் ஒன்றின் மீது மோதிவிட்டு பின் அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் மோதியது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் சம்பா பேட் பகுதியில் உள்ள லஷ்மி கார்டன் பகுதியில், அப்துல் மஜீத் என்ற 60 வயது நபர் கார் மீது மோதிய லாரி ஓட்டுனர் பின் அங்கிருந்து நெடுஞ்சாலைக்கு வந்து இருசக்கர வாகன ஓட்டியையும் சேதப்படுத்தியது தெரியவந்தது. Tirupati Brothers Clarification on Uthamavillan: கமல் ஹாசனின் உத்தமவில்லன் படுதோல்வி படம்; சர்ச்சை வீடியோவால் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.! விபரம் உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)