டிசம்பர் 25, காஷ்மீர் (Jammu Kashmir): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேசி (Reasi) மாவட்டத்தில் 16-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் வாகனம் ஒன்று பயணம் செய்தது. இந்த வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயத்துடன் தங்களை காப்பாற்றக்கூறி அலறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் உடனடியாக காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. Girl Cheated by Youth: ஆசையாக பேசி தனிமையில் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: 26 வயது இளம்பெண் கண்ணீர் புகார்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)