ஆகஸ்ட் 25, கோராபுட் (Odisha News): ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூரைச் சேர்ந்த 22 வயது யூடியூபர் ஒருவர், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23) மதியம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள டுடுமா நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ (Reels Video) எடுக்கும்போது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பாறையில் சிக்கியிருந்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாமல் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்த மனதை உடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், அந்த யூடியூபர் நீரோட்டத்தின் நடுவில் ஒரு பாறையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அங்கு இருந்த மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடலை துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி மனைவி கொடூரக் கொலை.. கணவர் வெறிச்செயல்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)