மே 25, புதுடெல்லி (NewDelhi): ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஜி7 (G7 Summit 2023) உச்சி மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), அதனைத்தொடர்ந்து பப்புவா நியூ கினியா (Papua New Guinea) மற்றும் ஆஸ்திரேலிய (Australia) நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பப்புவா நியூ கினியா அதிபர் ஜேம்ஸ் பிரதமரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி பிரதமர் நரேந்திர மோடியை தி பாஸ் (Modi The Boss) என குறிப்பிட்டார். இந்நிலையில், இன்று காலை டெல்லி வந்தடைந்த பிரதமர், தனது தொண்டர்களிடையே உரையாற்றுகையில், "தமிழ் மொழி என்பது நமது மொழி. இது ஒவ்வொரு இந்தியர்களுக்கான மொழி. உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த, பழமையான மொழி தமிழ். எனக்கு திருக்குறளை பப்புவா நியூ கினியா நாட்டில் டோக் பிசின் மொழியில் வெளியிட வாய்ப்பு கிடைத்தது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்தார். PM Modi Australia Tour: இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை மெருகூட்டிய சந்திப்பு; ஆஸி., பயணம் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)