மே 16, பொள்ளாச்சி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை வனச்சரகம் 958 சதுர கி.மீ பரப்பு கொண்டது ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள ஆனைமலை காடுகளில், பல வனஉயிரினங்கள் வாழுகின்றன. குறிப்பாக யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கை இங்கு அதிகம். வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வனசாரகத்தில், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்புக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில், யானைகள் (Elephants Cute Video) குழு ஒன்று அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. டிரோன் உதவியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடியோவில், யானை குழு புல்வெளியில் அயர்ந்து உறங்க, குட்டி யானை தாய் அருகே படுத்துக்கொண்டு உருண்டு வருகிறது. குழுவை வழிநடத்தும் தலைமை யானை உறங்காது குழுவை பாதுகாக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Russian President Putin's China Visit: சீனாவில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம்: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)