ஜூன் 25, வேலூர் (Vellore News): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு இரயிலில் பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு, சென்னை இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார். அந்த பதிவில், "இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது. MK Stalin: ரூ.150 கோடி அரசு மருத்துவமனை.. மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)