ஜூன் 25, வேலூர் (Vellore News): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister MK Stalin) வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10:25 மணியளவில் புறப்படும் சாய்நகர் சீரடி விரைவு ரயிலில் பயணிக்கும் முதல்வர், காட்பாடி ரயில் நிலையத்திற்கு நண்பகல் 12:10 மணியளவுக்கு சென்றடைகிறார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர், துரைமுருகன் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் சிறப்பு வரவேற்பளிக்கின்றனர். Gold Price Today: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.! 

மருத்துவமனையை திறக்க வருகையளிக்கும் முதல்வர்:

பின் அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி செலவில் . அதனைத் தொடர்ந்து முதல்வர் காணொளி காட்சி மூலமாக 9 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாலை 5 மணியளவில் கலைஞர் அறிவாலயம், நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கும் முதல்வர் சாலை மார்க்கமாக ஜோலார்பேட்டையில் பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.

பாதுகாப்பு பணியில் போலீசார் :

இதன் பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 8:00 மணிக்கு செல்ல உள்ளார். இந்த நலத்திட்ட உதவிகளை முன்னிட்டு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு மாவட்டத்திலும் சுமார் 4500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.

மருத்துவமனையை தொடர்பான வீடியோ :