ஆகஸ்ட் 30, தொண்டாமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசிபுரம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் இங்குள்ள தோட்டப்பகுதி, கிராமத்துக்குள் புகுந்து செல்வது வழக்கம் ஆகும். இதனிடையே, இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் கொம்பன் யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் மக்கள் தலைதெறித்து ஓட்டம் பிடித்தனர். சாலையில் சென்ற யானை தற்காலிகமாக தோட்டப்பகுதிக்குள் நுழைந்து உலா வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை, காவல்துறை எச்சரித்துள்ளது. Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. 2 நாட்களில் ரூ.1,720 உயர்வு.. ஷாக் நிலவரம்.! 

யானை விரட்ட தலைதெறித்து ஓடிய மக்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)