GG Vs UPW Women's WPL 2025 Match 3 Highlights (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 16, வதோதரா (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், மூன்றாவது ஆட்டம் இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் (Gujarat Gianst Women's Team) - உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's Team) மகளிர் அணியிடையே, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் (BCA Stadium Vadodara) மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் உபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் கிரண் 8 பந்துகளில் 15 ரன்னும், உமா 27 பந்துகளில் 24 ரன்னும், கீர்த்தி சர்மா 27 பந்துகளில் 39 ரன்னும், சுவேதா 18 பந்துகளில் 16 ரன்னும், சைமா 7 பந்துகளில் 15 ரன்னும் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த உபி வாரியர்ஸ் அணி (UP Warriorz Team WPL 2025) 143 ரன்கள் எடுத்தது. இதனால் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. GG Vs UPW WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - உபி வாரியர்ஸ் மோதல்.! நேரலை நேரம், பார்ப்பது எப்படி? தகவல் இதோ.! 

குஜராத் அணி அசத்தல் வெற்றி:

அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் அதிரடி ரன்கள் குவிப்பில் ஈடுபட்டு இறுதியில் வெற்றி அடைந்தனர். குஜராத் அணியின் சார்பில் விளையாடிய வீராங்கனைகளில் லாரா 24 பந்துகளில் 22 ரன்னும், ஆஷ் கார்ட்னர் 32 பந்துகளில் 52 ரன்னும், ஹர்லீன் 30 பந்துகளில் 34 ரன்னும், தீந்திரா 18 பந்துகளில் 30 ரன்னும் அடித்து அசத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்த குஜராத் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. GG Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு.. பந்துவீச்சில் அசத்திய பிரியா மிஸ்ரா.!  

இன்றைய ஆட்டத்தின் சிறந்த நபராகா கார்ட்னர் தேர்வு:

6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி:

சோபி விக்கெட் எடுத்த காட்சி:

பிரியா மிஸ்ராவின் அசத்தல் விக்கெட்: