Avani Lekhara | Asian Para Games 2022 (Photo Credit: @SportsArena1234 Twitter)

அக்டோபர் 23, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ (Hangzhou 2022) நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் 28 தங்கப் பதக்கம் உட்பட 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஹாங்சோ விளையாட்டு மைதானத்தில் ஆசிய பாரா (Asian Para Games 2022) விளையாட்டு தொடர் நேற்று முதல் தொடங்கிய நடைபெற்ற வருகிறது. 4000-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில், 22 வகை விளையாட்டுக்கள், 616 நிகழ்வுகள் நடைபெறுகின்றன‌. Sisters Died hit by Train: தண்டவாளத்தை அலட்சியமாக கடந்த வயோதிக சகோதரிகள் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சாவு; ஆம்பூரில் சோகம்.! 

ஆசிய விளையாட்டுகளை போல, பாரா போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீராங்கனை அவனி லெகாரா (Avani Lekhara), ஆசிய பாரா விளையாட்டுகளில், 10 மீட்டர் அளவிலான துப்பாக்கிசூடும் AR Standing SH1 பிரிவு இறுதிப்போட்டியில், 249.6 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த போட்டியில் உச்சபட்ச மதிப்பாக துப்பாக்கி சுடுதலில் 247 புள்ளிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு போட்டியில் அவனி அப்புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது வரை இந்தியா 3 வெள்ளி, 5 தங்கம், 10 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்றுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா பாரா ஆசிய போட்டிகளில் அதிக பதக்கத்தை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.