பிப்ரவரி 18, துபாய் (Sports News): கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள், நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை தலைமையேற்று நடத்தும் பாகிஸ்தானில், போட்டி நடைபெறும் மைதாங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆட்டங்கள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 19 பிப். 2025 நாளை முதல் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி தொடங்குகிறது. PAK Vs NZ: சாம்பியன்ஸ் ட்ராபி முதல் ஆட்டம்: பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதல்.. போட்டி எங்கு நடக்கிறது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
பாகிஸ்தானில் பங்கேற்காத இந்தியா:
அந்த வகையில், இந்தியா நடப்பு சாம்பியன்ஸ் 2025 தொடரில் பங்கேற்றாலும், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களை மேற்கொள்காண்பித்து, இந்தியா பாகிஸ்தானில் நடக்கும் போட்டிக்கு வராது என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், போட்டியை நடத்தியாக வேண்டும், அதில் இந்தியாவும் இடம்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு நேரடி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கராச்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அணிகளின் கொடியில், இந்தியாவை மட்டும் பாகிஸ்தானும் புறக்கணித்தது. Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; இந்திய தேசியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்.. காரணம் என்ன..?
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்:
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா முதலில் பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 20, 2025 அன்று, துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. அன்றைய நாளில் வானிலையை பொறுத்தவரையில் பகல் நேர வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும், இரவுநேர வெப்பநிலை 15 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Champions Trophy Team India Squad 2025)-யில், சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ஷமி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகராவார்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நஸ்முல் ஹுசைன் சந்தோ தலைமையிலான வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி (Champions Trophy Team Indai Squad)-யில் சௌம்யா சர்க்கார், தஞ்சித் ஹசன், தாவித் ஹிரோடி, முஷபிகுர் ரஹீம், மஹ்முத் உல்லா, ஜாகிர் அலி, ஹசன் மிராஜ், ரிஷத் ஹுசைன், தஸ்கின் அகமத், முஸ்தபிஸுர் ரஹ்மான், பர்வேஸ் ஹுசைன், நசும் அஹ்மத், தன்சின் ஹசன் சாகிப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.