
பிப்ரவரி 20, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டின் தொடங்கி நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், முதல் ஆட்டம் நியூசிலாந்து - பாகிஸ்தான் (New Zealand Vs Pakistan Cricket) அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் (India Vs Bangladesh Cricket) அணிகள் மோதிக்கொண்டன. மூன்றாவது நாள் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி (Afghanistan Vs South Africa Champions Trophy 2025) இடையே நடைபெறுகிறது. Axar Patel: அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்த அக்சர் படேல்.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல்.!
ஆப்கானிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகள் மோதல்:
இந்த ஆட்டம் 21 பிப்ரவரி 2025 (நாளை) அன்று, இந்திய நேரப்படி மதியம் 02:30 மணியளவில் (Afghanistan National Cricket Team Vs South Africa National Cricket Team Timeline) தொடங்கி நடைபெறுகிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். அன்றைய நாளில் கராச்சி (Karachi Weather Today) கிரிக்கெட் மைதானத்தின் வானிலையைப் பொறுத்தவரையில், பகல் நேர வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், இரவு நேர வெப்பநிலை 18 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். வறண்ட வானிலையே நிலவும் என்பதால், மழைக்கான வாய்ப்புகள் என்பது இல்லை. இந்த போட்டிகளை இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சிகளும் நேரலையில் காணலாம். IND Vs BAN: லட்டு கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடியாக ரன்கள் குவித்த வங்கதேசம்.. 229 ரன்கள் இலக்கு.!
தென்னாபிரிக்க அணி வீரர்கள்:
தென்னாபிரிக்க அணியின் சார்பில் (South Africa Squad for Champions Trophy 2025 SA Vs AFG Match) டேவிட் மில்லர் (David Miller), ரஸி டுசென், தம்பா பவுமா (Temba Bavuma), டோனி டி ஜோர்சி, ஏய்டன் மார்க்கம் (Aiden Markram), கார்பின் போஸ்ச், மார்கோ ஜான்சன், வியன் முல்டர், ஹென்ரிச் கால்சன் (Heinrich Klaasen), ரியல் ரிகில்டன், திரிஷ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs), காகிஸோ ரபாடா (Kagiso Rabada), கேசவ் மகாராஜ் (Keshav Maharaj), லுங்கி நெகிடி (Lungi Ngidi), டப்ராய்ஸ் ஷம்சி ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களில் தம்பா பவுமா அணியை வழிநடத்துகிறார். Rohit Sharma Apology: கேட்சை தவறவிட்டு, குழந்தை போல மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. நெகிழவைக்கும் வீடியோ.!
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் (Afghanistan Squad for Champions Trophy 2025 SA Vs AFG Match) ஹஷ்மதுல்லா ஷஹிதி (Hashmatullah Shahidi), இப்ராஹிம் சர்டன், ரஹ்மத் ஷா, செதிகுல்லா அடல், அசமுத்துல்லாஹ் ஓமர்சாய் (Azmatullah Omarzai), குல்படின் நயீப், முகம்மது நபி (Mohammad Nabi), விக்ரம் அலிகில், ரஹ்மானுலா குர்பாஸ், பரீத் அஹ்மத், பசல் பரூகி, நன்கேயளியா ஹரோடி, நவீத் ஜர்டன், நூர் அஹ்மத், ரஷீத் கான் (Rashid Khan) ஆகியோர் விளையாடவுள்ளனர். அணியை ஹஷ்மதுல்லா ஷஹிதி வழிநடத்துகிறார்.