GG Vs RCB Match 1 | TATA WPL T20 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 15, அகமதாபாத் (Circket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி நேற்று முதல் தொடங்கி, மார்ச் 15 வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals Women's Team), குஜராத் ஜெயின்ஸ் (Gujarat Giants Women's Team), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Women's Team), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore Women's Team), யுபி வாரியர்ஸ் (UP Worriers Women's Team) என ஐந்து அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டியில், மொத்தமாக 22 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. SL Vs AUS 2nd ODI 2025: ஆஸ்திரேலியாவை இலங்கை மண்ணில் வெளுத்துக்கட்டிய இலங்கை.. ஆஸி., படுதோல்வி.. இலங்கை திரில் வெற்றி.! 

குஜராத் அணி 201 ரன்கள் குவிப்பு:

நேற்றைய முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (GG Vs RCB WPL 2025) அணிகள் மோதிக்கொண்டது. இந்த ஆட்டத்தின் முடிவில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சார்பில் விளையாட வீரர்களில் பெத் மோனே 42 பந்துகளில் 56 ரன்னும், ஆஷ் கார்ட்னர் (Ash Gardner) 37 பந்துகளில் 79 ரன்னும் அதிகபட்சமாக விளாசி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்களும் குவித்து இருந்தனர். பெங்களூர் அணியின் சார்பில் பந்து வீசிய ரேணுகா தாகூர், 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ICC Champions Trophy 2025: ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வெற்றிபெறும் அணிக்கு பரிசு எவ்வுளவு தெரியுமா? அசத்தல் தகவல் இதோ.! 

பெங்களூர் அணி அசத்தல் வெற்றி:

அதனைத்தொடர்ந்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் எலிசே 34 பந்துகளில் 57 ரன்னும், ராகவி 27 பந்துகளில் 25 ரன்னும், ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 64 ரன்னும், கனிகா 13 பந்துகளில் 30 ரன்னும் அடித்து விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டத்தின் முடிவில் பெங்களூர் பெண்கள் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இறுதி 6 ரன்களை ரிச்சா தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து முடிவுக்கு கொண்டு வந்தது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.

ரிச்சா கோஷ் இறுதி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற காட்சி:

ஆஷ் கார்ட்னரின் அசத்தல் பந்துவீச்சில் விழுந்த விக்கெட்டுகள்: