ICC Cricket World Cup 2023 (Photo Credit: Twitter)

செப்டம்பர் 12, சென்னை (Cricket News): ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) தொடர் பிப்ரவரி-மார்ச் 2023 மாதங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனாவின் தாக்கம் காரணமாக முந்தையை போட்டிகள் தள்ளிப்போனதால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் தள்ளிப்போனது.

தற்போது அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை நடப்பு ஆண்டில் இந்தியா (India Host ICC Men's World Cup 2023) ஒருங்கிணைத்து நடத்துவதால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மைதானங்கள் விழாக்கோலமாகவுள்ளது.

1987, 1996 மற்றும் 2011ம் ஆண்டுகளில் பிற நாடுகளுடன் ஒன்றிணைந்து ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்திய இந்தியா, 2023ல் தனியாக உலகக்கோப்பையை நடத்துகிறது. முதல் மற்றும் இறுதி போட்டி குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் (Narendra Modi Stadium) வைத்து நடைபெறுகின்றன. காலிறுதி & அரையிறுதி தகுதிப்போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே (Wankhede Stadium) மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. Va Varalam Va First Look: பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் படம்; வா வரலாம் வா முதற்பார்வை வெளியானது.. லிங்க் உள்ளே.!

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் (Afghanistan), ஆஸ்திரேலியா (Australia), பங்களாதேஷ் (Bangladesh), இங்கிலாந்து (England), இந்தியா (India), நெதர்லாந்து (Netherlands), நியூசிலாந்து (New Zealand), பாகிஸ்தான் (Pakistan), தென்னாபிரிக்கா (South Africa), இலங்கை (Sri Lanka) நாட்டின் சார்பில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மண்ணின் வெற்றிக்காக போராடவுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மோதும் போட்டிகளை நேரில் பார்க்க, சம்பந்தப்பட்ட மைதானங்களில் டிக்கெட் விற்பனை தொடங்கியதும், அதனை வாங்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்ற்னர். 48 போட்டிகள் நடைபெறும் இத்தொடரில், 50 ஓவர்கள் முறையில் ஒவ்வொரு ஆட்டமும் நடைபெறும். வெற்றிபெறும் அணிகள் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா (Ravendra Jadeja), ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadhav) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் அணியை வழிநடத்துகிறார். Cricket Legend Lala Amarnath: உலக கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மறைந்த இந்திய வீரர்: நினைவுகூறிய பிசிசிஐ.!

இந்திய அணியை பொறுத்தமட்டில் அக். 8 ல் ஆஸ்திரேலியாவுக்கு (IND Vs AUS) எதிராக சென்னை சேப்பாக்கம் (Chennai Chepauk Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தை தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து அக்.11ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு (IND Vs AFG) எதிராக டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்திலும், அக். 14ல் பாகிஸ்தானுக்கு (IND Vs PAK) எதிராக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும்,

அக். 19ம் தேதி பங்களாதேஷுக்கு (IND Vs BAN) எதிராக புனே கிரிக்கெட் மைதானத்திலும், 22ம் தேதி நியூசிலாந்துக்கு (IND Vs NZ) எதிராக தர்மசாலா கிரிக்கெட் மைதானத்திலும், அக். 29ம் தேதி இங்கிலாந்துக்கு (IND Vs NZ) எதிராக லக்னோ கிரிக்கெட் மைதானத்திலும், நவ. 2ல் ஸ்ரீலங்காவுக்கு (IND Vs SL) எதிராக மும்பை வான்கடே மைதானத்திலும், நவ. 5ல் தென்னாப்பிரிக்காவுக்கு (IND Vs SA) எதிராக ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்திலும், நவ. 12ல் நெதர்லாந்துக்கு (IND Vs NL) எதிராக பெங்களூர் சின்னசாமி மைதானத்திலும் மோதுகிறது.

நவம்பர் 15 மற்றும் 16ம் தேதி நடைபெறும் அரையிறுதி சுற்றில், முதல் பிரிவில் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடத்தை பெற்றுள்ள அணி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிக்கு பலப்பரீட்சை நடத்தும். இரண்டாவது பிரிவில் புள்ளிபட்டியலில் 2வது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொள்ளும். Chandra Babu Naidu Arrest: சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு: கொந்தளிக்கும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்: ஆந்திராவில் பந்த்.!

இரண்டு பிரிவில் வெற்றிபெறும் அணிகள் இறுதியாக நவம்பர் 19ம் தேதி அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஐசிசி உலகக்கோப்பை 2023 பட்டத்தை பெற போராடும். இந்த ஆட்டங்கள் அனைத்தையும் நாம் வீட்டில் இருந்தபடி டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) செயலிலும் கண்டுகளிக்கலாம்.

சென்னை சேப்பாக்கம் (Chepauk MA Chidambaram Stadium) மைதானத்தில் வைத்து அக்.08ம் தேதி ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND) அணிகளுக்கு இடையேயான ஆட்டமும், அக்.13ம் தேதி பங்களாதேஷ் - நியூசிலாந்து (BAN Vs NZ) அணிகளுக்கு இடையேயான ஆட்டமும், அக்.18ம் தேதி ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து (AFG Vs NZ) அணிகளுக்கு இடையேயான ஆட்டமும், அக்.23ம் தேதி ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் (AFG Vs PAK) அணிகளுக்கு இடையேயான ஆட்டமும், அக்.27ம் தேதி பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா (PAK Vs SA) அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் நடைபெறும்.

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டியில் வெற்றிக்கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33,19,69,000) பரிசு வழங்கப்படும். அடுத்த நிலையில் உள்ள அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரும், அரையிறுதி வரை வந்து தோல்வியுறும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் டாலரும் வழங்கப்படும். மொத்தமாக இப்போட்டிக்காக 10 மில்லியன் டாலர் தொகை செலவிடப்படும்.