மார்ச் 28, கொல்கத்தா (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், கொல்கத்தா - லக்னோ அணிகள் இடையே நடைபெறவிருந்த 19 வது ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 அன்று, மதியம் 03:30 மணியளவில் நடைபெறவிருந்தது. ஆனால், மாநில அளவில் நடைபெறும் பண்டிகை காரணமாக, தேதி தள்ளிவைக்க கொல்கத்தா காவல்துறை கோரிக்கை அளித்தது. அதன்பேரில், ஏப்ரல் 6 அன்று நடைபெறவேண்டிய ஆட்டம், ஏப்ரல் 8, 2025 அன்று நண்பகல் 03:30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 அன்று, இரவு 07:30 மணிக்கு நடக்கவேண்டிய குஜராத் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் எப்போதும் போல நடக்கும். ஏப்.08 அன்று நண்பகலில் கொல்கத்தா - லக்னோ அணிகளும், இரவு 07:30 மணிக்கு பஞ்சாப் - சென்னை அணிகளும் திட்டமிட்டபடி மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Rahul Tripathi & Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் 2 விக்கெட் காலி.. திணறும் சென்னை.. கொண்டாட்டத்தில் ஆர்சிபியன்ஸ்.!
கேகேஆர் Vs எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மாற்றம் தொடர்பான அறிவிப்பு:
🚨 News 🚨
Match No. 19 of #TATAIPL 2025 between #KKR and #LSG at Eden Gardens, Kolkata has been rescheduled from Sunday, April 6th to Tuesday, April 8th at 3.30 PM IST.
Read to know more 🔽
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)