
பிப்ரவரி 14, அகமதாபாத் (Circket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி இன்று முதல் தொடங்கி, மார்ச் 15 வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals Women's Team), குஜராத் ஜெயின்ஸ் (Gujarat Giants Women's Team), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Women's Team), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore Women's Team), யுபி வாரியர்ஸ் (UP Worriers Women's Team) என ஐந்து அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டியில், மொத்தமாக 22 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. Who is Rajat Patidar: யார் இந்த ரஜத் பட்டிதார்? ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வானது எப்படி? கடந்து வந்த பாதை..!
நேரலையில் பார்ப்பது எப்படி? போட்டி தொடங்கும் நேரம்:
இறுதி இரண்டு ஆட்டங்களும் எலிமினேட்டர் மற்றும் இறுதி சுற்றுகள் ஆகும். குஜராத், பெங்களூர், லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டிகளின் முதல் ஆட்டம், இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் (BCA Stadium, Vadodara) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில், குஜராத் ஜெயின்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிக்கொள்கின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 07:30 மணி அளவில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை நேரலையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hot star) ஓடிடி-யிலும், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)-ம் பார்க்கலாம். RCB Captain: ஐபிஎல் 2025 போட்டியில், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!
குஜராத் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாடா மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் 2025 (Gujarat Giants Vs Royal Challangers Bangalore TATA Women's Premier League WPL 2025):
குஜராத் கிரிக்கெட் (Gujarat Giants Women's WPL Squad) அணியில் புமாலி, ஹேமலதா, வோல்வார்ட், லிட்சிபீல்ட், சைக், கார்ட்னெர், சிப்சன், டோடின், டியோல், சத்கரே, மூனி, கைஸ்யப், மேகா சிங், பிரக்சிதா நாயக், பிரியா மிஸ்ரா, சப்னம், தனுஜா கன்வர், காசவ் கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக (Gujarat Giants Women's Team Captain) ஆஷ் கார்ட்னெர் (Ashleigh Gardner) வழிநடத்துகிறார். பெங்களூர் கிரிக்கெட் அணியில் (Royal Challengers Bangalore Women's WPL Squad) தானி ஹோட்ஜ், சபினேனி மேக்னா, ஸ்மித்ரி மந்தனா, சார்லி டீன், எலிஸ் பேரி, ஜியார்ஜ் கிரகம், கனிகா அனுஜா, ராகவி பிஸ்ட், நுசத் பிரவீன், ரிச்சா கோஷ், ஜக்ரவி பவார், ஜோசிதா, ரேனுகா சிங், ஸ்ரேயன்கா பாடில், ஆஷா சோபனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை (Royal Challengers Bangalore Women's Team Captain) கேப்டனாக ஸ்மித்ரி மந்தனா (Smriti Mandhana) கேப்டனாக வழிநடத்துகிறார்.
பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள்:
5️⃣ Captains, 1️⃣ Dream 🏆
The teams are ready to go for another exhilarating #TATAWPL season! 🥳
Describe your excitement in 1⃣ word ✍@Giant_Cricket | @UPWarriorz | @DelhiCapitals | @RCBTweets | @mipaltan pic.twitter.com/1DgPcbLekQ
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2025