
பிப்ரவரி 27, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA WPL 2025) போட்டித்தொடரில், தற்போது வரை 12 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய பெங்களூர் - குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திரில் அனுபவத்தை தந்தது. அதனைத்தொடர்ந்து, போட்டியின் 13 வது ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Delhi Capitals Vs Mumbai Indians) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறுகிறது. நாளை (பிப்.28) இரவு 07:30 மணியளவில், பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. RCB Vs GG: சொந்த மண்ணில் தட்டுத்தடுமாறிய பெங்களூர்.. ரன்கள் குவிக்க போராட்டம்.. குஜராத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு.!
டெல்லி - மும்பை அணிகள் மோதல் (Delhi Vs Mumbai WPL T20 2025):
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் வெற்றிக்காக என்பதால், நாளைய ஆட்டம் சுவாரஸ்யத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தை பொறுத்தமட்டில், ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பெண்கள் (Mumbai Indians Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், அக்ஷிதா மகேஸ்வரி, அமன்தீப் கவுர் (Amandeep Kaur), அமஞ்சோத் கவுர், அமெலியா கேர், சோலி ட்ரையன், ஹெலேய் மெத்திவ்ஸ், நடினே டி, நடைலே சீவர் புரண்ட், சஜனா எஸ், கமலினி ஜி, ஜின்திமணி கலிடா, கீர்த்தனா பாலகிருஷ்ணன், பருணிகா சிசோடியா, சைகா இஷாக், சன்ஸ்கிரிதி குப்தா, சப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்திரக்கர், யஸ்டிக்கா பாட்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Danni Wyatt-Hodge: ஐந்து ஓவரிலேயே 3 விக்கெட் காலி; தானி, பெர்ரி, மந்தனா விக்கெட்.. டி. தோட்டின், ஆஷ் கார்ட்னர் அசத்தல்.! WPL-ல் முதல் முறை.!
மேக் லின்னிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் (Delhi Capitals Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், ஜெமியா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், சபில் வர்மா, சினேகா தீப்தி, அலிஸ் காப்செ, அன்னபெல் சுதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜானஸன், மரீசானே காப், மின்னு மணி, ஷிகா பாண்டே, நந்தினி காஷ்யப், சாரா ப்ரயஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், திலஸ் சாது, என் சாரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.