
பிப்ரவரி 11, போரூர் (Chennai News): தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர காமெடி நடிகராக இருந்து வந்தவர் கஞ்சா கருப்பு. இவர் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 14 வது நாளில் எலிமினேஷன் முறையில் வெளியேற்றமும் செய்யப்பட்டார். மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு, தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.
மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக குரல்:
இதனிடையே, இன்று அவருக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்படவே, நடிகர் கஞ்சா கருப்பு போரூரில் உள்ள மாநகராட்சியின் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு காலை 7 மணிமுதல் மருத்துவராக காத்திருந்த நிலையில், மருத்துவர்கள் 10 மணியை கடந்தும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமான கஞ்சா கருப்பு மற்றும் அவருடன் இருந்தவர், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கினர். உயிர்தப்பிய இரயில் பயணிகள்.. தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. கரூரில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
மூதாட்டி உடல்நிலை மோசம்:
மருத்துவர் எங்கே? எப்போது வருவார்? என பலமுறைகேட்டும், மருத்துவமனை பணியாளர்கள் உரிய பதில் சொல்லவில்லை. காலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோர், மூதாட்டி ஒருவர், தலையில் காயத்துடன் சிறுவன், நாய்கடியுடன் சிறுவன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்களும் சிகிச்சைக்காக காத்திருந்து இருக்கின்றனர். மருத்துவமனையில் உடல்நலக்குறைவுடன் காத்திருந்ததில், மூதாட்டிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.
கஞ்சா கருப்பு ஆவேசம்:
மருத்துவர்கள் யாரும் பணிக்கு வராத காரணத்தால், கஞ்சா கருப்பு ஊடகத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன்பேரில் மருத்துவமனையில் பணியாளர்கள் இல்லாத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மருத்துவரே இல்லாத அறையில், ஏசி மட்டும் இயங்கிக்கொண்டு இருந்ததாகவும் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் மருத்துவர்கள் பணியில் இல்லாத அதிருப்தியை வெளிப்படுத்தினர். TVK Vijay: தமிழ்நிலக் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் - தவெக விஜய் தைப்பூசம் வாழ்த்து.!
அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
இதனால் மக்கள் மத்தியில் கூச்சல்-குழப்பம் உண்டாகிய நிலையில், வேறொரு பிரிவில் வேலை பார்த்து வரும் பெண் மருத்துவர், நான் சிகிச்சை பார்க்கிறேன். சற்று அமைதியாக இருங்கள் என ஆஸ்வாச படுத்த முயற்சித்தார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பணியில் இல்லாத மருத்துவரின் பெயரை கேட்டு, அதன் விபரங்களை தெரிவித்த பின்னரே அமைதி அடைந்தனர். மேலும், பணியில் இல்லாத மருத்துவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.