Fire Accident at Kalpana Nayak IPS Office (Photo Credit: @EPSTamilnadu / @sathiyarajandmk X)

பிப்ரவரி 03, சென்னை (Chennai News): தமிழ்நாடு காவல்துறை ஆட்கள் சேர்புப்பு விஷயத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் (Kalpana Nayak IPS) அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார். இதுதொடர்பாக கல்பனா நாயக், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், "கடந்த 29 ஜூலை 2024ல், சென்னையில் உள்ள எனது அறை தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆட்கள் சேர்ப்பில் நடைபெற்ற முறைகேடுகளை நான் வெளிக்கொணர்ந்த சில நாளில் இது நடைபெற்றது.

அதிகாரி எனக்கே இந்த நிலைமையா?

நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும் நான் ஆட்கள் சேர்ப்பு விஷயத்தை தடுத்தேன். இதனால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படவிருந்த அவமானம் என்பது தடுக்கப்பட்டது. அதுவே எனது உயிருக்கும் ஆபத்தாக அமைகிறது. அரசு சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நான் எனது அறைக்கு சென்றபோது தீ விபத்து நடந்தது. நான் சில நிமிடங்கள் முன்பு வந்திருந்தால் உயிரை இழந்து இருப்பேன். ஷார்ட் சர்கியூட் பிரச்சனை காரணமாக விபத்து நடந்துவிட்டது. எனது அலுவலகம் விபத்திற்குள்ளான ஒரு நாளில், காவல்துறை ஆட்கள் பட்டியல் எனது ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்டது. மூத்த அதிகாரியின் எனக்கே உயிருக்கு பாதுகாப்பில்லை என்றால், பிற காவலர்களின் நிலை என்ன?" என கூறியுள்ளார். இந்த தீ விபத்து நடைபெற்ற 15 நாட்களுக்கு பின்னர், ஆகஸ்ட் 15, 2024 அன்று புகார் சங்கர் ஜிவாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்த 6 மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டபோதும், முடிவுகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.! 

எடப்பாடி பழனிச்சாமி (AIADMK Edappadi Palanisamy) கண்டனம்:

இந்த விஷயம் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பாணிசாமி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கடும் கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

முக ஸ்டாலின் அரசுக்கு எதிரான கரும்புள்ளி:

"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது, இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, முக ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனப்பதிவு: