Annamalai Meets TTV Dhinakaran Amid Tamil Nadu Election Talks (Photo Credit : @sureshelangov12 X)

செப்டம்பர் 23, சென்னை (Chennai News): 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. கூட்டணியில் முன்னதாகவே இடம்பெற்று இருந்த டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தொண்டர் உரிமை மீட்பு அணி ஆகியவை திடீரென தங்களை பாஜக கூட்டணியில் இருந்து விலகி அறிவித்தது.

டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு :

மேலும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒரு சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இந்த விஷயம் எதிர்வரும் தேர்தலுக்கு பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், அதனை ஒன்றிணைக்கும் முயற்சியால் நடந்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியிருந்தார். DMK Supporter Killed: திமுக பெண் பிரமுகர் வெட்டிக்கொலை.. பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்ட கணவர்.!

அண்ணாமலை பேட்டி :

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேசிய ஜனநாயக கூட்டணிகள், திமுகவுக்கு எதிராக கருத்துள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இதில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இருக்க வேண்டும். அவர்களை சந்தித்து மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தி முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. டிடிவி தினகரன் போன்ற பல தலைவர்கள் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நம்மை நம்பி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருந்தனர். அவர்களை காயப்படுத்தம் வகையிலான சொற்களைப் பயன்படுத்தி பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். அரசியலைப் பொறுத்தவரையில் எப்போதும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. டிடிவி தினகரன் டிசம்பர் மாதம் முடிவு சொல்வதாக தெரிய வருகிறது. அதனால் டிசம்பர் மாதம் வரை காத்திருப்போம்" என பேசினார்.