Airport Moorthy Attacked by VCK Supporters (Photo Credit : @RAMJIupdates / @EzhilAathi X)

செப்டம்பர் 06, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு புரட்சி பாரதம் அமைப்பின் நிறுவனரும் யூடியூபருமான ஏர்போர்ட் மூர்த்தி என்ற நபர் வந்திருந்தார். இவர் சோசியல் மீடியாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் விசிக ஆதரவாளர்கள் அவரை சமூக வலைதளங்களில் வசைப்பாடி வந்தனர். இதனிடையே அலுவல் ரீதியாக டிஜிபி அலுவலகம் வந்திருந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிய நபர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது செருப்பு வீசி தாக்குதல் :

மேலும் எனது தலைவரை நீ எப்படி அவதூறாக பேசுவாய்? என ஆபாசமான வார்த்தைகளால் திட்டி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் தலைவர் திருமாவளவன் வாழ்க என்று கூறிக்கொண்டே அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிகழ்விடத்தில் காவல்துறையினர் இருந்தும் தாக்குதல் நடந்தபோது தடுப்பதற்காக முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் குற்றசாட்டை ஏர்போர்ட் மூர்த்தி முன் வைத்துள்ளார். Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!

ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர் மீது தாக்குதல் :

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஆடுதுறை பகுதியில் பாமக பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் மீது நேற்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பிய நிலையில், அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க பாமக, நாதக கட்சியினர் வரவிருந்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த நிலையில், அவர் வெளியே நிற்பதை அடையாளம் கண்ட விசிக நிர்வாகிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பரபரப்பை உண்டாகியுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ :

ஏர்போர்ட் மூர்த்தியின் சட்டையை கிழித்து தாக்குதல் :