TN CM Stalin / TVK Vijay (Photo Credit: Youtube / @VijayTeamOnline X)

ஜூலை 27, சென்னை (Chennai News): 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வழியாக தேர்தல் வியூகத்துடன் மக்களை சந்தித்து வரும் நடிகர் விஜய், தனது கட்சியின் செயல்பாடுகளை தீவிரபடுத்தியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் நியமனம், மக்கள் நலப்பணிகள் என அரசியலை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து பல வியூகத்தையும் செயல்படுத்தி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடன் கூட்டணி வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வானிலை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் :

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் பேசிய நபர் ஒருவர் ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் காலணியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரிய வந்தது.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் :

இதனிடையே தற்போது த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீலாங்கரை காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் முதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விக்னேஷ் என்பவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.