அக்டோபர் 17, சென்னை (Chennai): ராபிடோ உட்பட பைக் டாக்சி (Bike Taxi) சேவை தலைநகர் சென்னையில் (Chennai) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஆட்டோ மற்றும் ஓலா உட்பட பிற கால் டாக்சி (OLA Call Taxi) ஓட்டுனர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓலா கார் டாக்சி பயன்பாடு மக்களிடையே குறைந்து, பலரும் தங்களின் பயணத்தை இருசக்கர வாகனங்களில் ராபிடோ உட்பட பிற இருசக்கர வாகன செயலிகள் மூலமாக மேற்கொண்டனர். இது வருமான ரீதியாக கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் முதலில் ராபிடோ பைக் ஓட்டுனர்களை பார்த்ததும் கடிந்துகொண்டபடி செயல்பட்ட ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், பின்னாட்களில் தாக்குதல் சம்பவத்திலும் களமிறங்கினர். US President Visit Israel: போர் பதற்றத்திற்கு மத்தியில் நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இதற்கிடையில், நேற்று முதல் ஓலா கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று முதலாகவே ஓலா ஆட்டோ, கார் சேவை சரிவர செயல்படுத்த இயலவில்லை.
குறைந்தளவு சேவையே ஓலா நிறுவனம் தரப்பில் வழங்கப்படுவதால், பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர். ஓலா ஓட்டுனர்கள் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், தங்களின் ஊதிய பலன் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
அக்.16ம் தேதியான நேற்று திங்கள்கிழமை பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை நோக்கி திரும்பி இருந்தனர். இவர்களில் ஓலா கார் பயணிகள் பலரும் வேலை நிறுத்தம் காணமாக சிரமங்களை எதிர்கொண்டனர். ஐடி உட்பட பெருநிறுவனங்களின் வேலை பார்க்கும் பலரும் அவசரத்திற்கு ஓலா சேவையை உபயோகம் செய்து வந்தனர்.
தொடர் வேலை நிறுத்தம் காரணமாக பயனர்கள் அவதிப்பட தொடங்கிய நிலையில், நேற்றைப்போலவே இன்றும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.