Chennai Shocker: சிறுமியை 11 பேர் கும்பல் பலாத்காரம் செய்த விவகாரம்; வாட்சப் குழுவில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.. பகீர் சம்பவம்.!
WhatsApp | Sexual Abuse (Photo Credit: Pixabay)

ஜூன் 04, புளியந்தோப்பு (Chennai Rape News): நமது குழந்தை செல்போன் வைத்து கேம் விளையாடுகிறார், ஹெட்செட் போட்டு பாட்டுதான் கேட்பார் என நினைத்து அலட்சியமாக செயல்படும் ஒவ்வொரு தருணமும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் சோகம் நிகழ்பவை ஆகும்.

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் & 1 இளம்பெண் ஆகியோர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களில் 17 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இதனைகவனித்த சிறுமியின் சித்தப்பா நேரம் கடந்து எங்கு சென்று வருகிறாய்? என கண்டித்தபோது, சிறுமிக்கும் - சித்தப்பாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது, சிறுமி தன்னை சிலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சண்டையை வேடிக்கைபார்த்த அக்கம் பக்கத்தினர், சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டதும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, சிறுமி தன்னை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர். Salaar Teaser Update: ஜூன் 6 அதிகாலையில் வெளியாகிறது சலார் திரைப்படத்தின் டீசர்; அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!

அவர்களின் பிடியில் இருந்து தான் தப்பி வந்துள்ளேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போது, அங்கு சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பது உறுதியானது. மாறாக அவரின் விருப்பத்தின் பேரில் சிலருடன் பாலியல் ரீதியான உறவு கொண்டிருக்கலாம் என முடிவுகள் வந்துள்ளன.

இதனையடுத்து, சிறுமியிடம் மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 15 பேர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அதாவது, சிறுமி மற்றும் அவரின் உறவினரான 2 பெண்கள் இரவு நேரங்களில் பல இடங்களுக்கு சென்று சுற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதேவேளையில் வயதை மீறி இவர்கள் பார்த்து தெரிந்துகொண்ட விஷயம், அவர்களையும் அப்படி செய்ய தூண்டியுள்ளது. இதனையடுத்து, இவர்கள் 15-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே நடந்துள்ளன. MP Shocker: மாற்றுத்திறன் இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண்மணி; கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

இவர்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட ஆண்களும், தங்களின் காம இச்சையை தீர்க்க அவர்களை நாடி இருக்கின்றனர். சம்பவத்தன்று மூன்று பெண்களில் இருவர் அவர்களின் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 17 வயது சிறுமி ஆண்களுடன் பாலியல் ரீதியான உறவுகொண்டு, நள்ளிரவில் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரின் சித்தப்பா சிறுமியை பார்த்து எங்கு சென்று வந்தாய்? என கேட்க, காவல் துறையினர் விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் தனுஷ் (வயது 19), சஞ்சய் (வயது 21), பாஸ்கர் (வயது 22), முத்துராமன் (வயது 21) மற்றும் 15 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறார்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தலைமறைவாக இருக்கும் கார்த்திக் என்ற இளைஞரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்கள் வாட்சப் குழு உருவாக்கி பெண்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாடிக்கையாளரை வரவைக்க புரோக்கர்கள் உதவியை கேட்டிருந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.