பிப்ரவரி 21, ஈரோடு: ஈரோடு கிழக்கு (Erode East Constituency) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக (DMK Candidate) கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் (Congress) கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை (E.V.K.S Elangovan) ஆதரித்து, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) இன்று ஈரோட்டில் வைத்து பிரச்சாரத்தில் (Election Campaign) ஈடுபட்டார். அப்போது அவர் மக்களிடையே வாகனத்தில் இருந்தவாறு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் (O. Panneer Selvam & Edappadi Palanisamy) ஆகியோர் எனது வாகனத்தில் கடந்த காலங்களில் தவறுதலாக ஏற சென்றார்கள். நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன், எனது வாகனத்தில் சென்றாலும் பரவாயில்லை, கமலாலயம் நோக்கி சென்றுவிட வேண்டாம் என தெரிவித்தேன். ஆனால், இருவரும் அதனை கேட்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி வாயை திறக்கவே இல்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் தனது வாயால் எனது கார் எப்போதும் கமலாலயம் (BJP Tamilnadu Head Office) நோக்கி பயணம் செய்யாது என தெரிவித்தார். ஆனால், அவர் கூறிய நேரமா? என தெரியவில்லை. இருவரின் காரும் கமலாலயம் நோக்கி பயணிக்கிறது. அங்கு முன் அனுமதி பெற காத்துகொண்டு இருக்கிறது. Towel out of Pythons Mouth: டவலை விழுங்கிய மலைப்பாம்பு.. மருத்துவ குழுவினரின் நெகிழ்ச்சி செயல்..!
அதிமுக பாஜகவுக்கு (AIADMK & BJP) அடிமையாக இருக்கிறது. பாஜக கட்சி ஆடியோ-வீடியோவை வைத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒருவரின் ஆடியோ, வீடியோவை வெளியிடுவேன் என மாறிமாறி சண்டையடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜக என்பது கவர்னர் கட்சி. இன்னும் சில காலங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன். எனது வாழ்த்துக்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சில ஆண்டுகளில் பாஜகவுக்கு தலைவராகிவிடுவார். அதிமுக மக்களுக்காக குரல் கொடுக்கமாட்டார்கள். கடந்த 10 நாட்களாக மோடியின் நெருங்கிய நண்பர் அதானியின் சொத்து மதிப்பு 6 இலட்சம் கோடி. இது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உள்ள நிலவரம். மத்திய அரசு பல திட்டங்களை அதானிக்கு கொடுக்கிறது. ஆனால், பங்குச்சந்தை சரிந்து நிலைமை மாறியுள்ளது" என்று பேசினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக ஈரோடு கிழக்கில் தமிழர் விரோத கூட்டணியான பாஜக-அதிமுகவை புறக்கணித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் @EVKSElangovan அவர்களுக்கு கை சின்னத்தில் வெற்றியை தாருங்கள் என கேட்டு எஸ்.கே.சி சாலை பகுதியில் இன்று பரப்புரை செய்தோம். pic.twitter.com/oALyNxYcTX
— Udhay (@Udhaystalin) February 21, 2023
Udhayanidhi Stalin Tweet
கொடநாடு கொலை-கொள்ளை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, வேளாண் விரோத சட்ட ஆதரவு... இதுதான் எடப்பாடி செய்த சாதனைகள் என,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன்@EVKSElangovan அவர்களுக்காக இன்று அண்ணா டெக்ஸ் சாலையில் கூடியிருந்த மக்களிடையே ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். pic.twitter.com/qUzJjfUZxb
— Udhay (@Udhaystalin) February 21, 2023