Fisker Layoff (Photo Credit: @IANS X)

மார்ச் 01, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், மேன்ஹாட்டன் கடற்கரை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மின்சார கார் உட்பட பிற பொருட்களை தயாரித்து வழங்கி வரும் நிறுவனம் பிஸ்கர் (Fisker Inc). கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு, வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பிஸ்கரில் தற்போது 450 க்கும் அதிகமான வேலையாட்கள் பணியாற்றி வருகின்றனர். Bomb Threat To Tamilnadu Head Secratariate: தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு..! 

15% ஊழியர்கள் பணிநீக்கம்: இந்நிலையில், கடந்த காலாண்டுகளில் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் காரணமாக, அடுத்த 12 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகளை வெற்றிகரமாக எடுத்துச்செல்ல 15% பணியாளர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேலும், பெரிய அளவிலான நிறுவனமும் ஒன்றுடனும் கூட்டாக சேர்ந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Madurai HC On Keeladi Excavation Petitions: கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பணிநீக்க நடவடிக்கை: அந்நிறுவனமும் - பிஸ்கரும் இணைந்து வடஅமெரிக்காவின் பிரதான மின்சார கார் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட 80 - 100 பேர் வரையில் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.