Uppilipalayam Gas Tanker Crash (Photo Credit: @Sunnewstamil X / @sopreetha X)

ஜனவரி 03, உப்பிலிபாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் (Coimbatore Gas Tanker Accident) உள்ள உப்பிலிபாளையம் (Uppilipalayam) மேம்பாலம் வழியாக, நேற்று நள்ளிரவு நேரத்தில் கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி எரிவாயு ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரி சென்றுகொண்டு இருந்தது. லாரி ஓட்டுநர் வாகனத்தை மேம்பாலம் வழியாக செலுத்தியபோது, வாகனத்தின் ஆக்சன் திடீரென துண்டித்துள்ளது. Kundrathur News: திடீரென மிரண்டு முட்டிதூக்கிய மாடு; மகனின் கண்முன்னே தாய் பலி.. சென்னையில் சோகம்.! 

மீட்பு பணிகள் தீவிரம்:

இதனால் டேங்கர் லாரியின் பாரம் ஏற்றும் பகுதி தனியாக பிரிந்து தறிகெட்டு ஓடி, பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. நல்வாய்ப்பாக பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை எனினும், டேங்கரில் எரிவாயு இருப்பதால் தீயணைப்பு & மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

வணிக வளாகங்களுக்கு உத்தரவு:

தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து நீரை பீய்ச்சி அடித்து தீப்பற்றும் வாய்ப்பை கட்டுப்படுத்தினர். மேலும், சேதமடைந்த பகுதியை அப்படியே சரிசெய்து, பின் டேங்கரை தூக்கி நிறுத்தி கியாஸ் மையத்திற்கு எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு கருதி அங்குள்ள வணிக வளாகங்களை திறக்க வேண்டாம் எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Pudukkottai: சமையல் பணியில் சோகம்.. அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து விபத்து..! புதுக்கோட்டையில் பரபரப்பு.! 

விபத்து நடந்த பகுதியில், 500 மீட்டர் சுற்றளவில் பள்ளிகளுக்கு விடுமுறை:

மேலும், அங்கு சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் அளவில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதி வழியாக செல்லும் போக்குவரத்துகள் அனைத்தும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. நிகழ்விடத்தில் காவல்துறை, தீயணைப்பு & மீட்புத்துறை களப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அங்கு வந்து குவிவதை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கவிழ்ந்து கிடைக்கும் லாரியில் நீரை பீய்ச்சி அடைக்கும் தீயணைப்பு படையினர்:

எல்.பி.ஜி சிலிண்டர் ஏற்றிவந்த கண்டைனர் லாரி விபத்தில் சிக்கி மீட்பு பணிகள் தீவிரம்: