Salem Shocker: "உணவு சமைக்கவில்லையா?" என கேள்வி எழுப்பிய கணவன் கழுத்தறுத்து படுகொலை; சேலத்தில் பகீர் சம்பவம்.!

நள்ளிரவில் உறங்கிக்கொண்டு இருந்த கணவரை, மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஓமலூரை அதிரவைத்துள்ளது. சமையல் தொடர்பாக எழுந்த வாதம் கொலையில் முடிந்ததை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Salem Shocker:
Victim Selvam | Accuse Poongodi (Photo Credit: @ThanthiTV X)

செப்டம்பர் 23, ஓமலூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கமலாபுரம் கிராமம், ஆசாரி தெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது 65). இவரின் மனைவி பூங்கொடி. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் திருமணம் முடிந்து தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். வயதான தம்பதிகள் இருவரும் கரும்பு ஆலையில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

கழுத்தறுத்து கொலை:

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு நேரத்தில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த செல்வத்தின் கழுத்தை பூங்கொடி அரிவாள்மணையால் அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரை கொலை செய்ததாக பூங்கொடி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். Trichy Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்? திருச்சியில் பிரபல ரௌடி சுரேஷ் வெட்டிக்கொலை.. மனைவியின் கண்முன் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

பரோட்டா வாங்கி வந்த கணவன்:

விசாரணையில், கரும்பாலையில் வேலையை முடித்துவிட்டு வந்த செல்வம், வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அப்போது, மனைவியிடம் சாப்பாடு உள்ளதா? என கேட்டுள்ளார். மனைவி பதில் ஏதும் கூறாமல் இருக்கவே, தனது மனைவி சமையல் செய்யவில்லை என்பதை தெரிந்துகொண்டு, கடைக்கு சென்று பரோட்டா வாங்கியுள்ளார். அதனை சாப்பிடுமாறு மனைவிக்கும் கொடுத்துள்ளார்.

நள்ளிரவில் கொடூரம்:

கணவர் வாங்கிவந்த பரோட்டாவை சாப்பிட பூங்கொடி மறுத்து, கோபத்துடன் இருந்து வந்ததாக தெரியவருகிறது. அச்சமயம் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் உணவுக்கு பின்னர் உறக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்ட செல்வம் உறங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் விழித்துக்கொண்ட பூங்கொடி, கணவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து, கணவரை கொலை செய்த பூங்கொடியை கைது செய்த காவல்துறையினர், சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 03:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).