
மார்ச் 10, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் வயதான நபர் ஒருவர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் என கூறப்படுகிறது. இவர் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தலைமை ஆசிரியருக்கு அறிமுகமான பெண் ஒருவர், தனது நிதிப்பிரச்சனை காரணமாக கடன் கேட்டு இருக்கிறார். கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பெண்ணை கட்டிப்பிடித்து படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, நடப்பதை அந்த நபருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். மேலும், "நான் உங்களிடம் கடன் தானே கேட்டேன் என்று கூற, இப்போது இதனால் என்ன வந்திருப்போகிறது? நான் பணம் கொடுக்கிறேன். அதனை நீ வைத்துக்கொள். என்னுடன் தனிமையில் இரு. விருப்பம் இல்லையா? உனக்கு. உனக்கு உதவி நான் தானே செய்ய வேண்டும்" என கூறுகிறார். Karur Shocker: பட்டப்பகலில் கல்லூரி மாணவி.. கரூரில் அதிர்ச்சி.. பதற்றத்தில் பெற்றோர்.!
கடன் கேட்ட பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த நபர்:
மறுமுனையில் பேசும் பெண்மணி, கடனாக கேட்டதை கொடுங்கள். இல்லையேல் விடுங்கள். எனக்கு அந்த விஷயத்தில் விருப்பம் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கிறார். பெண்ணிடம் முதியவர் தவறாக நடக்க முற்பட்ட சம்பவமும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீடியோ தொடர்பாக காவல்துறை விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. உரையாடலை கவனிக்கும்போது தனக்கு அறிமுகமான நபரிடம் பெண் உதவி கேட்டு சென்றார். அப்போது, இவ்வாறான விஷயம் நடந்தகாக தெரியவருகிறது. இது ஹனி ட்ராப் முறையாக இருக்குமோ? எனவும் சந்தேகிக்கப்படுகிறது. வீடியோவில் இருப்பது யார்? வீடியோ வெளியானது எப்படி? என விசாரணை நடைபெறுகிறது.
பெண்ணிடம் அநாகரீகமாக நடக்கும் நபரின் வைரல் வீடியோ:
ஒய்யாரமாக அமர்ந்து உல்லாச அழைப்பு முதியவர் செய்த படுகேவலம் "சார் விடுங்க சார் அய்யோ வேண்டா..."#women #abuseallegations #women pic.twitter.com/RNGvI55Dfy
— Thanthi TV (@ThanthiTV) March 10, 2025