TN CM MK Stalin with Gukesh (Photo Credit: @MKStalin X)

டிசம்பர் 13, கோலாலம்பூர் (Sports News): சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் விளையாட்டு வீரரான குகேஷ் (Gukesh Dommaraju), சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் (World Chess Championship - Singapore 2024) போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில், அவர் நடப்பு சாம்பியனான டிங் லீரேனை எதிர்த்து களம்கண்டு இருந்த நிலையில், இறுதிவரை போராடி தனது வெற்றியை உறுதி செய்து, மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சவாலான போட்டி:

சீனாவின் பிரபலமான செஸ் வீரரும், நடப்பு செஸ் சாம்பியன்ஷிப் வீரருமான டிங் லீரேன் (வயது 32), குகேஷ் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டி 14 சுற்றுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்புடன், சவாலான களமாக அமைந்தது. தொடக்கத்தில் குகேஷின் விளையாட்டு பாயிண்டுகளை குவித்தாலும், பின் ஒன்பதாவது சுற்றிலேயே இருவரும் சமநிலைக்கு வந்தனர். Universal Health Coverage Day 2024: உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம்.. முக்கியத்துவம் என்ன தெரியுமா?! 

14 வது சுற்றில் ஆட்டம் முடிவு:

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு ஆட்டத்திலும் குகேஷ் - டிங் இடையே சமமான புள்ளிகள் காரணமாக, 14 வது சுற்று வரை ஆட்டம் நீடித்துச் சென்றது. 13 வது சுற்றில் ஆட்டம் முடிவடைந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த வேளையில், இரண்டு வீரர்களின் நகர்வும் 14 வது சுற்றுவரை ஆட்டத்தை எடுத்துச்சென்று, இறுதியில் குகேஷுக்கு வெற்றி கிடைத்தது. இரண்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வெற்றியை அடைந்தனர்.

Gukesh Dommaraju (Photo Credit: @sachin_rt X)

கண்கலங்கிய குகேஷ்:

போட்டியில் வெற்றிபெற்று சில நொடிகள் கண்கலங்கிய குகேஷ், "இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி. மிகப்பெரிய பயிற்சிக்கு பின் இவ்வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக உளவியல், உடல்ரீதியாக தான் தயாராகி வந்தேன். மொத்தமாக 10 ஆண்டுகள் மேற்கொண்ட பயிற்சி தற்போது சாத்தியமாகி இருக்கிறது. இந்தியாவிடம் இருந்த சாம்பியன் பட்டம் 11 ஆண்டுகளுக்கு முன் பறிபோன நிலையில், அதனை மீட்டுக்கொண்டு வர நான் கண்ட கனவு நனவாகி இருக்கிறது" என பேசினார். விடுமுறை: 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் இதோ.! 

பிரதமர் வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில், குகேஷை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இளவயதில் அற்புத சாதனைக்கு குகேஷ்-க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி குகேஷின் ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. குகேஷின் வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டி இருக்கிறது. சிறந்த எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து:

குகேஷுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில், "உங்களதுசாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!" என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பதிவு:

முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டி பதிவு:

வெற்றியடைந்ததை எண்ணி ஆனந்தமாக கண்கலங்கிய குகேஷ்: