Manmohan Singh with Narendra Modi & Karunanidhi (Photo Credit: @EPSTamilnadu / @MKStalin / @NarendraModi X)

டிசம்பர் 27, புது டெல்லி (New Delhi): முன்னாள் இந்திய பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் (Manmohan Singh), தனது 92 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் கடந்த பல வருடங்களாகவே ஒதுங்கி இருந்த நிலையில், இயற்கை எய்தியுள்ளார். மன்மோகன் சிங்கின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள மத்திய அரசு, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும், இன்று மத்திய அமைச்சரவையும் முன்னாள் பிரதமருக்கு இரங்கல் தெரிவிக்க கூடுகிறது.

அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Manmohan Singh (Photo Credit: Facebook)
Manmohan Singh (Photo Credit: Facebook)

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இரங்கல்:

பிரதமர் மோடி தனது இரங்கல் பதிவில், "இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்-கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்புமிக்க பொருளாதார நிபுணராக உயர்ந்தவர், நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றியவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தவர், பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனங்களும், நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். நாங்கள் பல ஆளுமை விஷயங்களில் அளப்பரிய விவாதங்களை நடத்தி இருந்தோம். அவரின் ஞானம், பணிவு எப்போதும் சிறந்தது. ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவு:

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்த தலைவர், தலைமைத்துவம் வைத்து இந்தியாவை வரலாற்றில் முன்னேற்றி காண்பித்த தலைவர் என திமுக தலைவர், முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் பதிவு:

அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்: