Accuse Kalaivani -Mallesh

மே 11, சேலம் (Crime News): கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை (Denkanikottai) பகுதியில் வசித்து வருபவர் மல்லேஷ் (வயது 32). திருமணம் முடிந்த இவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். சேலம் (Salem) மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், சிங்கம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் (Brick Factory) தங்கிருந்து வேலை செய்து வருகிறார்.

இந்த செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் (Sathyamangalam, Erode), புதுவடவள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரின் மனைவி கலைவாணி (வயது 27) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுடன் தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இதற்கிடையில், கலைவாணி மற்றும் மல்லேஷ் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல் வயப்பட்ட இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சக்திவேல், தனது மனைவியை கண்டித்து கள்ளக்காதலை கைவிடக்கூறி அறிவுறுத்தி இருக்கிறார். அதனை கண்டுகொள்ளாத கலைவாணியோ, தனது குழந்தையுடன் மல்லேஷின் வீட்டில் குடியேறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். Gingee Murder: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொந்த தம்பியை கொன்ற அண்ணன்; விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்.!

சில மாதங்கள் வரை இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், 1 வயது குழந்தையை வளர்க்கும் விஷயம் தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. இந்த ஆத்திரத்தில் தம்பதிகள் இருந்த நேரத்தில், நேற்று குழந்தை அழுதுகொண்டு இருக்க இருவரும் அதனை தூக்கி சுவையில் பலமாக அடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குழந்தையின் மண்டை உடைந்து, இரவு நேரம் முழுவதும் உயிருக்கு போராடி வந்த குழந்தையை எவ்வித ஈவு இரக்கமும் இன்றி அப்படியே விட்டுள்ளனர். பின்னர், மறுநாள் காலையில் ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியான குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக பலியானது.

குழந்தை இறந்ததும் கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து தப்பி சென்றுவிட, மருத்துவர்கள் தாரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல் வெளியானது. Small Pox: தமிழகத்தில் பரவும் சின்னம்மை; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!

கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருக்கும் நிலையில் தான் 2ம் கவரை பிரிந்து 3-வதாக சக்திவேலை திருமணம் செய்துள்ளார். வருமானம் இல்லாத காரணத்தால் இருவரும் ஒரு வயது குழந்தையோடு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்த நிலையில், அங்கு மல்லேஷ் என்பவருடன் கலைவாணி பழகி இருக்கிறார்.

முதலில் கலைவாணி மல்லேஷிடம் நெருக்கம் காட்டவில்லை என்றாலும், பல ஆசை வார்த்தை கூறி கலைவாணியின் மனதை அவர் கொள்ளை கொண்டுள்ளார். கலைவாணியை மல்லேஷ் மதுபோதைக்கு அடிமையாக்கிய நிலையில் தான் அடுத்த சம்பவமும் நடந்துள்ளது. மதுபோதையில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி, சம்பவத்தன்று உல்லாசத்துக்கு பின்னர் அழுத குழந்தையை கொலை செய்துள்ளது.