ஜனவரி 26, ஓமலூர்: சேலம் மாவட்டத்தில் (Salem) உள்ள ஓமலூர் அரசு மருத்துவமனையில் (Omalur Government Hospital) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்டிடங்கள் திறப்பு விழா போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, தமிழ்நாடு மக்கள் மருத்துவம் & நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister Ma. Subramanian) மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு (Minister K.N Nehru) உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது, மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்தை (New Building Opening) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த அமைச்சர்களில், கே.என் நேரு அங்கிருந்த மருத்துவ பணியாளர் மெழுவர்த்தியை தீப்பெட்டியால் ஏற்றுவதற்கு சிரமப்படுவதை கண்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக தீப்பெட்டியை கைகளில் வாங்கிய அமைச்சர் கே.என் நேரு, "இங்க அதை கொடும்மா.. நான் எவ்வுளவு சிகிரெட் (Cigarette) கொளுத்தி பழகியுள்ளேன்" என கூறினார். Spicejet Anger Response to Passengers: திமிராக பதிலளித்த SpiceJet பணியாளர்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூபர் Cherry Vlogs..! விமான நிலையத்தில் நடந்தது என்ன?.. பரபரப்பு வாக்குவாதம்.!
இதனைக்கேட்ட ஒருவர் கைதட்ட, அதனைத்தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியதால் அனைவரும் கைதட்டியுள்ளனர். இதற்கிடையே, அமைச்சர் கே.என் நேரு சிகிரெட் பற்றவைத்து பழவிட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சை விவாதத்தை கிளப்பியுள்ளது. மக்களுக்கு நற்பணிகள் செய்யும் இடத்தில் உள்ள அமைச்சர், சிகிரெட் கொளுத்தி பழகிவிட்டேன் என கூறுவது எப்படிப்பட்டது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
புகையால் ஆண்டுக்கு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிகிறது. நானும் நமது சொந்தங்கள், நண்பர்களை கேன்சர் போன்ற புகையின் பக்கவிளைவு நோய்களால் இழந்து வருகிறோம். இந்த நிலையில், அமைச்சர் விளையாட்டாக அதனை தெரிவித்து இருந்தாலும், இடம், பொருள், ஏவல் என்ற தமிழின் தனித்துவத்தை உணர்ந்து அவர் பேசியிருக்க வேண்டும் என பலரும் கூறுகின்றனர்.
நான் நிறைய சிகரெட் இழுத்து பழகிட்டேன்.
-அமைச்சர் நேரு
கழகத்தில இருந்து தினமும் ஒருத்தர் நமக்கு எண்டர்டைமெண்ட் பன்ன வராங்க😂...pic.twitter.com/8WvokUZzvz
— முருகை.ஜேப்பி ( MJ Jeappy ) (@mjjillajeppy) January 25, 2023
புகை உடலுக்கும், உடல் நலத்திற்கும் எமன்.. அது உயிரை கொல்லும்! (Smoking Is Injurious to Health.. It Kills!)..