Private Job Camp in Tamilnadu (Photo Credit; @TNDIPRNews X)

அக்டோபர் 24, சென்னை (Chennai News): வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது சேலம், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

மாவட்ட அளவிலான நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு:

முகாமில் சிறப்பு அம்சமாக 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களால், மாவட்டத்திற்கு உள்ளேயும்-வெளியேயும் இருக்கும் நிறுவனங்களில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வழியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கல்வி தகுதியாக குறைந்தது எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதிகள் போன்ற படிப்புகள் கூறப்பட்டுள்ளது. H Raja: "திருமாவளவனுக்கு அதைப்பற்றி பேச தகுதி இல்லை" - எச்.ராஜா பாய்ச்சல்..!

தேவையான ஆவணங்கள்:

கல்வி நிறுவனங்களில் பயின்றுவிட்டு சரிவர வேலை கிடைக்காதோர், உள்ளூரிலேயே (மாவட்டத்திற்குள்) வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையோர் இதன் வாயிலாக பயன்பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, விருப்பம் உடையோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை முகாமுக்கு நேரில் கொண்டு வந்து நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். தனியார் நிறுவனத்தால் இறுதி செய்யப்படும் நபர்களுக்கு உடனடி பணி ஆணையும் வழங்கப்படும்.

மாவட்ட வாரியாக aமுகாம் நடைபெறும் இடங்கள்:

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலந்தாய்வு பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் இருக்கும் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது.