TN School Students / TN Govt Logo (Photo Credit : @kalaignarseithigal X / Wikipedia)

மே 20, சென்னை (Chennai News Today): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்சி பயின்ற மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதனால் மாணவர்கள் தங்களின் எதிர்கால கல்விக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் அடுத்து என்ன பயிலலாம் எனவும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். பலரும் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து நேர்காணல் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

அர்ஜுன் சம்பத் பதிவு :

இந்நிலையில், 11ஆம் வகுப்பு படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோவில் இரண்டாம் ஆண்டு சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பான பதிவுக்கு தமிழ்நாடு அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. Gold Silver Price: தங்கம் விலை அதிரடி குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் வெளியிட்ட அறிவிப்பில், "அர்ஜுன் சம்பத் தெரிவித்த தகவல் முற்றிலும் பொய்யானது. தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவர்கள் மட்டுமே நேரடியாக டிப்ளமோவில் இரண்டாம் ஆண்டு சேர முடியும். பிளஸ் டூ வகுப்பை நிறைவு செய்த வணிகவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் நேரடியாக டிப்ளமோ இரண்டாம் ஆண்டில் சேரலாம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

11ஆம் வகுப்பு படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படிக்கலாம் என எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ள தகவல் உண்மைக்கு மாறானது. அதனை பகிர வேண்டாம். பரப்பவும் வேண்டாம்" என தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் யாரும் குழம்பாமல் தான் முன்பே முடிவு செய்த படிப்பை தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்ஜுன் சம்பத் பதிவிட்ட வீடியோ :

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பதில் :