Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜூன் 03, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. Coimbatore News: 19 வயது கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து கிராம் தங்கம் இன்று ரூ.9,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 உயர்ந்து ரூ.1,13,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.