ஜனவரி 20, ராயப்பேட்டை: சென்னை ராயப்பேட்டையில் (Royapettah, Chennai) உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (Amma Makkal Munnettra Kazhagam) தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக (AMMK) போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நல்ல செய்தியை விரைவில் கூறுவோம்.
ஜனவரி 27ம் முடிவு எடுக்கப்படும். கடந்த தேர்தலில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என கூறினீர்கள். இடைத்தேர்தலில் எங்களால் சாதிக்க முடியும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் எஞ்சிய 4 ஆண்டுகள் தொகுதியில் நலத்திட்டங்கள் நடக்கும் என மக்கள் வாக்களிக்கலாம். ஆனால், ஆர்.கே நகரில் (RK Nagar By Poll 2017) நடந்ததை கவனிக்க வேண்டும். NIA Announce Reward Rs.5 Lakhs: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ அதிரடி.. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம்.!
இறுதி முடிவு மக்களின் கைகளில் உள்ளன. அதிமுக பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) என 2 பிரிவாக உள்ளது. அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் உள்ளது. இதனால் அவர்கள் திடீரென இணைத்து இரட்டை இலை கேட்டு தேர்தலை சந்திக்கலாம்" என்று பேசினார்.