TVK Vijay / Aadhav Arjuna (Photo Credit : @AVinthehousee X)

ஜூலை 15, சென்னை (Chennai News): தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சமூக ஆர்வலர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயுடன் இணைந்தார். தற்போது தமிழக வெற்றி கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிங்கை தொட்டதும் தூக்கிட்டாங்க.. தமிழ் நடிகருக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஆப்பு.. மக்களே கவனம்.! 

ஆயுதங்களுடன் ஆதவ் அர்ஜுனாவை நோட்டமிட்ட மர்மநபர்கள் :

இது தொடர்பாக தியாகராஜ நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் ஆட்டோ, காரில் ஆயுதங்களுடன் வந்த நபர்கள் ஆதவ் அர்ஜுனாவை நோட்டமிட்டுள்ளனர். காலையிலேயே ஆட்டோவில் ஐந்து நபர்களுக்கும் மேல் வந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு :

பின் மீண்டும் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்துள்ளனர். இரவு நேரத்தில் 7 நபர்களாக அவர்கள் ஆயுதத்துடன் வந்து நோட்டமிட்டனர். ஆதவ் அர்ஜுனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஆதவ் அர்ஜுனாவின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் குறிப்பிட்ட தேதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். ஆட்டோவில் சுற்றி வந்தவர்கள் யார்?, எதற்காக ஆயுதத்துடன் சுற்றினர்? ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்ததன் காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் சார்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.