வானிலை: பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கோடை மழை.. கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்.!!
கோடையின் வெப்பம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மே 13 முதல் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 11, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில்(Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 11-05-2025 முதல் 13-05-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 13-05-2025 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருப்பதால் ஒரு சில இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தேதிகள் மற்றும் இடங்கள்:
14-05-2025 மற்றும் 15-05-2025 தேதிகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. Chennai Shocker: 13 வயது சிறுமியை சீரழித்த 12 பேர் கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 12-05-2025 பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் 12-05-2025 முதல் 15-05-2025 வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on May 11, 2025 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

