பிப்ரவரி 03, சென்னை: கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் பிரதான கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு, அக்கட்சிக்காக பல மேடைப்பேச்சுகளில் எதிராளிகளை வெளுத்து வாங்கிய அரசியல்வாதி (Politician) மற்றும் நடிகர் (Actor), எழுத்தாளர் (Writer) பழ. கருப்பையா (Pala. Karuppiah). இவர் தற்போது தனக்கென புதிய கழகத்தை தோற்றுவித்துள்ளார். அதற்கு "தமிழ்நாடு தன்னுரிமை கழகம் (Tamilnadu Thannurimai Kazhagam)" என்ற பெயரையும் வைத்துள்ளார். கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் கட்சியின் தொடக்க விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் (Chennai YMCA Stadium) நாளை மறுநாள் நடைபெறுகிறது. அன்று கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் (Chennai Press Club) வைத்து செய்தியாளர்களை சந்தித்த பழ. கருப்பையா, "தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற பெயரால் புதிய அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதையொட்டி உங்களை சந்திக்கிறேன். அந்த கழகம் இன்றைய அரசியலில் ஏன் காலத்தேவையாகியது என்பதை பற்றி கூறுகிறேன். கட்சியின் முதல் கொள்கை நேர்மை, எளிமை, செம்மை (Honesty, Simplicity, Refinement). அறம் சார்ந்த அரசியல். முக்கிய கொள்கை சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூகப்படுத்துவோம் (Let's socialize). அரசியல் என்பது வணிகமாக ஆகிவிட்ட நிலையில், அதனை மாற்றி அமைக்கும் முயற்சி இது.
ஊர்வலம், கூட்டத்திற்கு வர என பணம் இருந்தால் மட்டுமே கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை இன்றளவில் அரசியல் கட்சிகள் செயல்பட முடியும். ஆட்சியில் இருந்து பணத்தை விதைத்து ஆட்சியை பிடிப்பது, ஆட்சியை பிடித்து மீண்டும் அறுவடை செய்வது என்பது விஷ சூழல். இந்த அரசியல் கடந்த 50 ஆண்டுகளாக வேறுபாடு இன்றி இரண்டு தலையாய கட்சியாலும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அந்த அரசியலை மாற்றுவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. Taliban Thanks to India: ரூ.200 கோடி நிதிஉதவி வழங்கும் இந்தியாவிற்கு தலிபான்கள் நன்றி…!
சிலபேராக முதல் எட்டு வைத்துள்ள நாங்கள், இம்முயற்சியில் வெற்றி பெறுவோமா? என்பது வேறு. ஆனால், ஒரு முயற்சி தொடங்கப்பட்டு ஆக வேண்டும். ஒரு நீண்ட பயணத்திற்கு முதல் அடி தான் காரணம். நாங்கள் முதலடியை எடுத்து வைக்கிறோம். மக்களிடம் கருத்து மாற்றத்தை எடுத்து வைக்கிறோம். அரசியல் (Indian Politics & Tamilnadu Politics) என்பது பொருக்கி தின்னும் களம் என்பதை போல இருக்கிறது. தற்போது வரையில் அனைத்து கட்சியின் பொதுக்குழுவும் ஆட்டுக்கறி விருந்து நடக்கும் இடமாகத்தான் இருக்கிறது.
அவை கலந்துபேசி விவாதிக்கும் இடங்களாக இல்லை. கலந்து பேசி விவாதிக்கும் பொதுக்குழு காந்தி காலத்தில் இருந்தது. இன்று ஒருவர் தீர்மானத்தை படிப்பார், பிறர் கேட்டுக்கொண்டு போவார். இவை மாற வேண்டும். அனைவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அரசியலில் மோசமாக இருந்த நிலையை காந்தி (Mahatma Gandhi) மாற்றி விடுதலை (Independence) வாங்கித்தந்தார். மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர் விடுதலை வாங்கித்தந்தார். அவரின் வழியில் மக்களிடம் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். எங்களது கட்சியின் கொடி முழு பச்சை நிறம். அதற்கு நடுவே தமிழ்நாடு நில வரைபடம், அதில் காந்தி நடக்கிறார்" என கூறினார்.