G-Mail: அடேங்கப்பா.. நமது ஜி-மெயிலில் இப்படியான சிறப்பு வசதிகள் எல்லாம் இருக்கா?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
Respective: G-Mail

டிசம்பர், 10: டிஜிட்டல் யுகத்தில் (Digital World) இ-மெயில் தவிர்க்க இயலாத விஷயங்களில் ஒன்றாகியுள்ளது. உலகளவில் மக்களால் உபயோகம் செய்யப்படும் இ-மெயில் (E-Mail) பிற சமூக வலைத்தளங்களை போல அல்லாமல் அலுவல் சார்ந்த தகவல் பரிமாற்றத்திற்கு இ-மெயிலில் கூகுளின் ஜி-மெயில் (G-Mail) பயனர்களுக்கு பேருதவி செய்கிறது.

உலகளவில் கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள ஜி-மெயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும், அதன் எளிய பாதுகாப்பு வசதிக்காக நாம் அறியாத பல விஷயங்களும் உள்ளன. நாம் சில நேரங்களில் அவசரங்களில் செய்யும் தவறுகளை ஜி-மெயிலில் எப்படி திருத்துவது என்ற பல விஷயங்களை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

அனுப்பிய மெயிலை நீக்குதல் (Undo Send): நாம் ஜி-மெயிலில் சில நேரங்களில் அவசர கதியில் மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, பின்னர் அதில் உள்ள தவறினை நொடியில் கண்டுபிடிப்போம். இன்னும் சில தருணங்களில் மெயிலை தயார் செய்யும் போதே Send-ஐ அழுத்திவிடுவோம். இவ்வாறாக நாம் செய்யும் தவறினை திருத்தி, மீண்டும் மெயில் அனுப்ப தவறுதலாக சென்ற மெயிலை Send அழுத்திய 5 வினாடிகள் முதல் 30 வினாடிகளுக்குள் அதனை Undo செய்தால் எதிர் பயனருக்கு மின்னஞ்சல் செல்லாது. உங்களது இ-மெயிலில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஆள் செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு சென்றால் அங்கு Undo Send எனப்து இருக்கும். அதனை கிளிக் செய்தால் மெயில் செல்வதை தவிர்க்கலாம். iPhone Vs Android: ஐ-போன் சிறந்ததா? ஆன்ராய்டு சிறந்ததா?.. எது இன்றுள்ள பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு..! 

Settings => All Settings => Undo Send ==> Choose Duration

இருப்பிட பிரச்சனை (Storage Issue): மனிதர்களுக்கு தான் நாம் வாழும் இடத்தில் (நிலத்தில்) பல பிரச்சனை என்றால், கூகுளுக்கு ஸ்டோரேஜ் விஷயத்தில் தகராறு இருக்கிறது. பெரிய அளவிலான தரவுகளை இ-மெயில் முறையில் பெறவும், அனுப்பவும் இருக்கும் பேக்கப் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால் அவசர கதியில் பல மெயில்கள் தேங்கி கிடைக்கும்.

அப்போது, பழைய தேவையில்லாத மெயில்களை ஒவ்வொன்றாக தேடி டெலீட் செய்வதற்குள் போதும் என்றாகிவிடும். இவ்வாறான தருணத்தில் சர்ச் பாரில் Large 5M என்று தேடினால், பெரிய அளவிலான மெயில்கள் வரும். அவற்றில் தேயில்லாதவற்றை நாம் எளிதில் நீக்கிவிடலாம்.

Search Bar => Type “LARGE:5M “ ==> Choose Large Files => Delete

முன்திட்டமிடல் (Schedule Mail): ஒருசில தருணங்களில் நாம் அனுப்பும் மெயில், எதிர் பயனரை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய நாம் விரும்புவோம். இவ்வாறான மெயில் அனுப்பவேண்டிய நேரம் உறுதியானால், அதனை மெயில் பாக்சில் டைப் செய்து, முடிந்ததும் Send ஆப்சனுக்கு கீழே இருக்கும் முக்கோண கூறிய தொட்டு Schedule செய்யலாம்.

Schedule Mail ==> Choose Date & Time

போலியான/கவனமாக இருக்க வேண்டிய மெயில்கள் (Spam Mail): உறுதியற்ற அல்லது கணக்குகள் இல்லாத நிறுவனத்தின் வலைதளத்தில் தினமும் விளம்பர மெயில்கள் வருகின்றன. இவை அதிகளவு இன்பாக்ஸை அடைத்துவிடும். இவ்வாறான ஸ்பேம் மெயிலை பார்க்கவேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில், Unsubscribe என்று சர்ச் பாரில் தேடினால், அதில் வரும் மூன்று கோடுகளை கிளிக் செய்து, அட்வான்ஸ் செட்டிங்ஸ் சென்று பில்டர் ஆப்ஷனை பயன்படுத்தி குறிப்பிட்ட மெயிலை Archive செய்துகொள்ளலாம்.

Search Bar => Type “UNSUBSCRIBE” => Advanced Search ==> Create Filter => Skip The Inbox

சாட் வசதி (Chat): நாம் நமது நண்பருடன் மெசேஜில் அல்லது நம்பர் உள்ளவர்களிடம் சேட்டிங் செய்வோம். அதேபோல், நாம் நமது நண்பருக்கு மெயில் அனுப்பிவிட்டு, அவருடன் சேட் ஆப்ஷனில் சென்றும் கலந்துரையாடலும். இதில் குழுவாக கலந்துரையாடும் வசதியும் உண்டு.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 04:48 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).