டிசம்பர், 10: ஐ-போனா? ஆண்ட்ராய்டா? (i Phone or Android)என்ற விவாதம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகும். ஐ-போன்களை காட்டிலும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய அம்சத்தை விரைந்து வழங்குகிறது. மக்களிடம் அதிகளவில் உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு சாதாரண மக்கள் வரை அதிகஅளவில் வாங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐ-போன் iOS 14 மென்பொருள் அப்டேட்டுக்கு பின்னர் அதன் லெவல் மாறியுள்ளது.
ஆப்பிள் (Apple i Phone) பயனர்களின் தனியுரிமையில் கவனம் செலுத்தி வருகிறது. அதனைப்போல, பயனர்களின் டேட்டா இணைய நிறுவனத்தால் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற விசயத்திற்கான தெளிவையும் அளிக்கிறது. இது ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரவில்லை. அதுதவிர்த்து, ஆண்ட்ராய்டு புதிய விளம்பரங்களை பரிந்துரை செய்து வரும் மையமாகவும் இருக்கிறது. ஐபோன் ஆண்டிராயிடுகளை போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும்.
செயலிகள் சேமிப்பு - சேகரிப்பு விபரங்களின் தெளிவு (Data): ஐ-போன்கள் தனது தனியுரிமை நடைமுறைகள் மற்றும் அதன் செயலிகள் எந்தெந்த டேட்டாவினை சேகரிக்கும் என்பதை பயனர்களுக்கு அது வெளிப்படுத்துகிறது. ஆண்ட்ராய்டு போன்கள் தனியுரிமை அனுமதி கேட்கும் என்றாலும், அது சேகரித்த தகவலினை வைத்து விளம்பரத்திற்கான டிஜிட்டல் பக்கத்தை உருவாக்குகிறதா? என்பது குறித்த தகவலை தெரிவிப்பது இல்லை.
குளோன் செயலிகளுக்கு அவசியம் இல்லை (No Clone Apps): ஆண்ட்ராய்டு செல்களில் குளோன் ஆப்களை பார்ப்பதும், கிளிக் பைட்ஸ் ஆப்களை காணுவதும் பொதுவானது. ஐ-போனில் பயனர்கள் எந்த ஆப்பை குறிப்பிடுகிறார்களோ அந்த செயலியின் தெளிவுகளை பதிவிறக்கத்திற்கு ஆப்பிள் கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் பயனர்கள் கிளிக் பைட் ஆப்களின் அறிமுகத்தை தவிர்க்கலாம். G-Mail: அடேங்கப்பா.. நமது ஜி-மெயிலில் இப்படியான சிறப்பு வசதிகள் எல்லாம் இருக்கா?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
செயல்பாடுகளின் தனித்துவம் (Performance): iOS ஆப்பிள் தனது தனியுரிமை அம்சத்தை எப்போதும் பாதுகாக்கும். ஆப்பிளின் கொள்கை விளம்பரத்திற்கான அனுமதியை கேட்கும். நாம் தேடுவதை அடிப்படையாக கொண்டு சமூக பக்கங்களில் அதன் விளம்பரங்களை பிரதிபலிக்காது. ஆனால், ஆண்ட்ராய்டு செல்போனில் நாம் ஒருபொருளை ஏதேனும் ஒரு சமூக பக்கத்தில் தேடினால், அது தொடர்பான விளம்பரங்கள் நம் கண்முன் நிற்பதை எடுத்துரைக்கும்.
ரகசிய மைக், கேமிராவை கண்காணிப்பது (Spy Cam Alert): iOS ஆப் தனது செயலிகள் இயக்கத்தின் போது, அவை ரகசியமாக கண்காணிக்கிறதா? என்பதை மஞ்சள் / பச்சை நிற அறிவிப்புடன் எச்சரிக்கும். இவை நமது தனிப்பட்ட நேரங்களை பாதுகாப்புடன் செலவழிக்க வழிவகை செய்யும்.
பாஸ்வேர்ட் நகல் பிரச்சனை (Password Copy Issue): தனியொரு செயலி தனது கிளிபோர்டினை ரகசியமாக கண்காணித்து பாஸ்வேர்ட் போன்ற தகவலை பெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் ஆப்பிள், அது குறித்த தகவலையும் நமக்கு தெரியப்படுத்தும். ஆன்டிராய்டு போனில் நமது பாஸ்வேர்ட் நகலெடுக்கப்பட்டு தேவையான இடத்தில் ஒட்டப்படும். அதனையே பலரும் விரும்புகிறோம். ஆனால், ஆப்பிளில் அவ்வாறானதை செய்ய இயலாது.
குறைந்தபட்ச அனுமதி (Permission): ஆப்பிளை பொறுத்த வரையில் அதன் வடிவமைப்பாளரின் கொள்கை, பயனர்களின் தனிப்பட்ட தகவல் திருடுபோவாமை போன்றவற்றுக்கான விஷயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன் கொள்கைக்கு உட்படாத செயலிகளை பயனர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாது. இது அவர்களின் தனிப்பட்ட தகவலை பாதுகாக்கிறது.
அதே வேளையில், பயனர்கள் தாங்கள் விரும்பும் செயலியை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அவை நமக்கு நன்மையை செய்கிறது என்பதால், ஐ-போன் உபயோகம் எதிர்கால தகவல் திருட்டுக்கு தடையாக இருக்கலாம். ஸ்மார்ட்போனை போல திறந்தவெளி மைதானமாக அது செயல்படாது.