Respective: Smart Tv

டிசம்பர், 11: கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட தொலைக்காட்சி முதல், இன்று உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் (Oldest Television to Smart Tv) வரை நூற்றாண்டில் நாம் கண்ட வளர்ச்சிகள் ஏராளம். இதில் தொலைக்காட்சி என்பவை இன்றைய குடும்பத்தின் முக்கிய பொழுதுபோக்கு தேவைகளில் ஒன்றாக இருக்கிறது.

பலரும் ஸ்மார்ட் டிவி பக்கம் திரும்பிவிட்ட காரணத்தால், இந்தியாவின் அதன் விற்பனையும் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. ஸ்மார்ட் டிவிகளில் எது சிறந்தது? நமக்கானது எது? என்பதை தேர்வு செய்வதில் பல சந்தேகங்கள் நிலவிக்கொண்டு இருக்கும். அது குறித்த விபரத்தை முழுவதுமாக அறிந்து ஸ்மார்ட் டிவி வாங்குவது நல்லது.

ஒருவேளை ஸ்மார்ட் டிவி வாங்க உங்களுக்கு விருப்பம் இருந்தால், அதன் வகைகள் குறித்து தெரிய ஆர்வம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்கு மனதளவில் எழும் பல சந்தேகமும் தீரும். ஸ்மார்ட் டிவிக்களில் எல்.சி.டி, எல்.இ.டி., ஓ.எல்.இ.டி., க்யூ.எல்.இ.டி., 4கே என பல விதங்கள் இருக்கின்றன. FactsOfJayalalitha: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அசரவைக்கும் அறியப்படாத தகவல்கள்..! 

இன்றளவில் எல்.இ.டி டிவிக்கள் அதிகளவு விற்பனையாகிறது. இது மின்சார பயன்பாட்டினை குறைக்கும் என்பதாலும், எல்.இ.டி வாழ்நாள் அதிகம் என்பதாலும் மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். எல்.சி.டி., எல்.இ.டி இரண்டு தொலைக்காட்சியிலும் எல்.சி.டி திரையே பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஓ.எல்.இ.டியில் பிக்சல் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் நல்ல திரை அனுபவம் இருக்கும்.

Sony 43 Inch Bravia SmartTV
Representative Image: Sony 43 Inch Bravia SmartTV

தொலைக்காட்சியை பொறுத்தமட்டில் ஸ்டெபிலைஸர் தேவை என்பது இல்லை. டிவியில் இருக்கும் பவர் சப்ளை சிஸ்டம் 110 வோல்ட் முதல் 240 வோல்ட் வரை மினசார அளவு மாறினாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஒரு ஸ்டெபிலைஸர் 170 வோல்டில் இருந்து தாங்கும் என்பதால், தொலைக்காட்சிக்கு அது தேவையில்லை.

இடி மின்னல் சமயத்தில் ஸ்டெபிலைஸர் உதவி செய்யாது. அதற்கு பதில் ஸ்பைக் பூஸ்டர் 2000 வோல்ட் வரை தாங்கிக்கொள்ளும். இவை மட்டுமே இடி, மின்னல் சமயத்தில் உதவி செய்யும். 4 நபர்கள் இருக்கும் வீட்டில் உங்களின் பெட்ரூம் அளவு பொறுத்து டிவி வாங்கிக்கொள்ளலாம்.

32 இன்ச் முதல் 43 இன்ச் வரை உள்ள டிவி பொதுவானது ஆகும். பெரிய ரூம் இருந்து, உங்கள் கைவசம் பணம் இருந்தால் 55 இன்ச் டிவி வாங்கிக்கொள்ளலாம். டிவியை On Off செய்கையில் முறையாக செயலில் இருக்கும் App-களில் இருந்து வெளியேற்றிவிட்டு Off செய்ய வேண்டும். இதனை தவிர்க்கும்போது Software பாழாகாமல் டிவி பாதுகாக்கப்படும். FactsOfKarunanidhi: அரசியலில் தவிர்க்க இயலாத நாயகன், கலைஞர் கருணாநிதி குறித்து அறியப்படாத உண்மைகள்.! 

ஆண்டிராய்டு டிவிக்கள் எடை குறைவானவை என்பதால் கவனத்துடன் உபயோகம் செய்ய வேண்டும். தரையில் இருந்து நான்கடி உயரத்திலேயே வைப்பது நல்லது. அதேபோல, டிவியை எப்போதும் ஆனில் வைக்காமல், மின்சார இணைப்பை துண்டித்து முழுவதும் Off நிலையில் வைக்க வேண்டும். இடியின் போது மின் இணைப்பில் இருந்து தனித்து விலக்கி வைப்பது நல்லது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:15 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).