ஆகஸ்ட் 12, சென்னை (Technology News): சர்வதேச அளவில் அதிக செல்போன் விற்பனையை மிக எளிதான காலத்தில் அணுகிய ஒப்போ நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் விரைவில் சந்தைகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 13, 2023 (நாளை) இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முந்தைய Oppo செல்போன்களில் சில விஷயங்களை அப்படியேவும், ஒருசில புதுமையான விஷயங்களை கையாண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓப்போ செல்போன்களை பொறுத்தமட்டில் அவை கேமராவுக்கு பெயர்போனவை. அதேபோல, தற்போதைய Find X6 Pro ஸ்மார்ட்போனிலும் அட்டகாசமான கேமரா திறன் வழங்கப்பட்டுள்ளது. 50 MP அளவிலான Wide-Angle, Ultra-Wide Angle & Periscope கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. Trending Video: இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்; அலட்சியம் & அதிவேகத்தால் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
3 அட்டகாசமான கேமரா இருப்பதால், பயனருக்கு உச்சபட்ச சிறப்பம்சத்துடன் புகைப்படம் எடுக்க உதவும். அதேபோல, முன்பக்க செல்பி கேமிரா 32 MP அளவில் வழங்கப்பட்டுள்ளது. பயனர் தொடர்ந்து ஸ்மார்ட்போனை உபயோகம் செய்யும்போது சிறந்த அனுபவத்தையும் வழங்கும்.
Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset உபயோகம் செய்ததாக கூறப்பட்டாலும், அவை குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பின்னரே அவைகுறித்த விபரம் தெரியவரும். 6.82 inch அளவுள்ள LTPO3 AMOLED தொடுதிரை, 120 Hz புதுப்பிப்பு திறன், 2500 nits வெளிச்சம் வழங்கும் திறன், 5000 mAh Li-Po பேட்டரி, 100 W Super VOOC சார்ஜர் போன்றவையும் சிறப்பம்சமாக வழங்கப்படுகின்றன. Emily Ratajkowski: இதுக்கு கோட்-சூட் போடாமலே இருக்கலாம் போலியே.. நடிகை எமிலியின் அசத்தல் கிளிக் இதோ.!
12 GB RAM & 256 GB ROM, 16 GB RAM & 256 GB ROM, 16 GB RAM & 512 GB ROM ஆகிய மாடல்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிறங்களை பொறுத்தமட்டில் கருப்பு, பச்சை, பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். விலையை பொறுத்தமட்டில் ரூ.72,190 க்கு virpanai seyalpadalam என எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் IP68 நீர் மற்றும் மாசு சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் தூசு & நீர் இருக்கும் இடங்களில் குறிப்பிட்ட நிமிடங்கள் அவரை அதனை உபயோகம் செய்யலாம். Gorilla Glass Victus 2 & Gorilla Glass 5 அமைப்புகள் தொடுதிரையை (Screen) பாதுகாக்கிறது.