PM Narendra Modi, DMDK Vijayakanth (Photo Credit: @NarendraModi X)

டிசம்பர் 28, புதுடெல்லி (New Delhi): தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகவும், தேசிய முற்போக்கு திராவிட கழககத்தின் நிறுவனர் & தலைவராகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth). சினிமாவில் உச்ச நட்சத்திர அடையாளத்தை பெற்று, பல முன்னணி நடிகர்களின் வளர்ச்சிக்கு தொடக்கத்தில் அடித்தளமிட்டு கொடுத்தார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மக்களுக்கு நல்வாழ்வை அளிக்க வேண்டும் என கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட (Desiya Murpokku Dravida Kazhagam) கழகத்தை தோற்றுவித்த விஜயகாந்த், 2006ல் நடந்த தேர்தலில் அதிமுகவுடன் களமிறங்கி 26 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி தலைவராகவும் உருவானார்.

வெளிநாட்டில் சிகிச்சை: தீவிர அரசியல் பயணத்தில் இருந்த விஜயகாந்த், திடீர் உடல்நலக்குறைவை எதிர்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தாயகம் திரும்பிய விஜயகாந்தின் உடல்நிலை சரிவான நிலைமையிலேயே இருந்தாலும், அவ்வப்போது பிரச்சாரங்களில் கலந்துகொண்டார். MEA Jai Shankar Meets President Putin: ரஷிய பிரதமரை நேரில் சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாற்றம்.!

தொடர் உடல்நலக்குறைவு, கொரோனாவால் மரணம்: சமீபகாலமாகவே தீவிர உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) மற்றும் அவரின் மகன்கள் பராமரிப்பில் இருந்து வந்தார். இவர்கள் விஜயகாந்தை நன்கு கவனித்து கொண்டனர். கடந்த சில நாட்கள் முன்பு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதியானவர் உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்தார். மீண்டும் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், கொரோனா உறுதியாகி உயிர் பிரிந்தது.

இல்லத்தில் குவியும் தொண்டர்கள்: விஜயகாந்தின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள், திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்த விஜயகாந்தின் வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கல் குறிப்பை பதிவு செய்துள்ளார்.

பிரதமரின் இரங்கல் பதிவு: அந்த பதிவில், "விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், கவர்ச்சியான நடிப்பின் மூலமாக மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றவராகவும் இருந்தார். அரசியல் தலைவராக, தமிழ்நாட்டில் ஈடுபாடு கொண்ட தன்னலமற்ற தலைவர் ஆவார். அவரின் மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்புவது கடினம். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். அவருடன் நான் சந்தித்த காட்சிகளையும் நினைவு கூறுகிறேன். ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.