ஆகஸ்ட் 29, சென்னை (Technology News): 2023ம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிறைவடைந்து, ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதம் பிறக்கவுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 5G நெட்ஒர்க் சேவை அறிமுகம் செய்யப்பட்டு, பலரும் 5G ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பி இருக்கின்றனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல புதிய உருவாக்கத்திற்கு அடித்தளமிடுவதால், மக்கள் அவ்வப்போது தங்களின் சூழ்நிலைக்கேற்ப புதுப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் செல்போன் பிரியர்கள் எதிர்பார்த்த சில ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவை குறித்த தகவலை தெரிந்துகொள்ளலாம். Cow Attack on Women: சாலையில் நடந்துவந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மாடு; பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
ஆப்பிள், மோட்டோரோலா, சாம்சங் உட்பட பல நிறுவனங்களின் செல்போன்கள் செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் சிறப்பம்சங்களும் புதுப்பிக்கப்படுவதால், மக்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களை இப்போதே தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிவிட்டனர். அவர்களுக்கான சிறப்பு செய்தி தொகுப்பு இதுதான்.
ஆப்பிள் ஐ-போன் 15 சீரிஸ் (Apple iPhone 15 Series): ஆப்பிள் ஐ-போன் 15 சீரிஸ் பலரையும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் முதல் இடத்தில் இருக்கிறது. ஐ-போன் 15 சீரிஸ் அடுத்தகட்டமாக பயனர்கள் எதிர்பார்த்த புதுப்பிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏற்றும் திறன், சி ரக கொண்ட யுஎஸ்பி கேபிளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்சி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE): சாம்சங் நிறுவனத்தின் S23 ரக ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி 2023ல் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் Fan Edison தற்போது வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 6.4 இன்ச் எச்டி டிஸ்பிலே, 120 Hz புதுப்பிப்பு திறன், 4,500 mAh பேட்டரி திறன், 25W விரைந்து சார்ஜ் ஏறும் திறன், OneUI 5.1 ஆண்ட்ராய்டு 13 OS ஆகிய சிறப்பம்சத்துடன் களமிறங்குகிறது. Snake Wrapped Women Leg: கால்களை பற்றிய நல்ல பாம்பு; 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்து சிவமந்திரம் சொன்ன பெண்மணி.. இறுதியில் நடந்தது இதுதான்.!
மோட்டோரோலா (Motorola): மோட்டோரோலா நிறுவனத்தின் Moto G84 5G ஸ்மார்ட்போன், செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. 5000 mAh பேட்டரி திறனுடன், 6.55 இன்ச் டிஸ்பிளே, 50 MP கேமிரா உட்பட பல சாராம்சத்துடன் ஸ்மார்ட்போன் களமிறக்கப்படுகிறது.
Honor 90 (ஹானர் 90): சர்வதேச அளவில் ஹானர் பிரியர்களால் எதிர்பார்க்கப்படும் செல்போன்களில் Honor 90 இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்பு ஹானர் நிறுவனம் தனது செல்போனை சந்தைகளில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் என்றும் ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கணித்து இருக்கின்றனர்.