YouTube (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 09, சான் பிரான்சிஸ்கோ (San Francisco): கூகுள் (Google) நிறுவனத்தின் அங்கமான யூடியூப் (YouTube) எப்போதும் நமக்கு புதுமனையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் பதிவிடும் பல்வேறு வீடியோக்களை வீட்டில் இருந்தவாறு நாம் பார்த்து மகிழ உதவுகிறது.

நாளொன்றுக்கு 122 மில்லியன் மக்கள் 1 பில்லியன் மணிநேரம் யூடியூபில் மக்கள் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு 16 நிமிடம் ஒவ்வொரு யூடியூப் பயனாளரும் அதனை பயன்படுத்துகின்றனர். Rajinikanth Went to Himalayas: 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்; ஜெயிலர் ‘Impossibile’ – ரசிகர்களுக்கு இன்பச்செய்தியுடன் பேட்டி.! 

யூடியூபில் நாம் பார்க்கும் வீடியோவை Watch History அமைப்பு சேமித்து வைக்கிறது. இதன் மூலமாக பார்வையாளர் தான் பார்க்கும் வீடியோ சம்பந்தமான பல விடியோக்கள் அடுத்தடுத்து அவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழில்நுட்பத்தால் வழங்கப்படுகிறது.

YouTube Subscribe (Photo Credit: Pixabay)

ஒருசிலர் Watch History அமைப்பை அணைத்து (Off) வைத்திருப்பார்கள். இவர்கள் தாங்கள் பார்வையிட்ட () விடியோக்கள் சம்பந்தமான அடுத்த வீடியோக்களை பெரும்பாலும் விரும்புவது இல்லை. இதுதொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் அமைப்பை மாற்றச்சொல்லி பல புகார்களும் வந்தன.

இதனையடுத்து, யூடியூப் நிறுவனம் தற்போது Watch History-ஐ அணைத்து வைத்துள்ளவர்களுக்கு இனி YouTube அவர்களின் பார்வை வீடியோக்களுக்கு ஏற்ப பரிந்துரைக்காது என அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. Karnataka Shocker: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: தனி மனிதனின் இரக்கமற்ற செயலால் பறவை இனத்திற்கு ஏற்பட்ட அபாயம்; வனத்துறை கடும் நடவடிக்கை!

இதற்கான அமைப்புகளை முழுமையாக முன்னதாகவே மாற்றும் பணிகள் நடந்து வந்ததால், History அமைப்புகளை அணைத்து வைத்துள்ளோருக்கு இனி வரும் நாட்களில் அது சம்பந்தமான வீடியோ பரிந்துரைக்கப்பட்டது என்ற விதிமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

சுமார் 467 மில்லியன் இந்தியர்கள் நாளொன்றுக்கு உபயோகம் செய்யும் யூடியூப் செயலியில், இந்தியர்கள் 40 ஆயிரம் பேர் 1 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டு இருக்கின்றனர். இந்தியர்கள் பதிவிடும் பல வீடியோக்களுக்கு சர்வதேச அளவிலும் வரவேற்பு கிடைக்கின்றன.