ஜனவரி 20, இஸ்லாமாபாத் (Islamabad): பொருளாதார மந்த நிலை, உள்நாட்டு பிரச்சனை, அரசியல் குழப்பம், பயங்கரவாத தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி பாகிஸ்தான் தவிர்த்து வருகிறது. இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி அரசியலால் அகற்றப்பட்டு, அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை மேலும் கேள்விக்குறியாக்கப்பட்டது. எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்ற நிலையில், அரசியல் கட்சியினரின் இணைய வழி பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அவ்வப்போது அங்கு தேசிய அளவில் இணையதள சேவை முடக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை இணையதள சேவை முடக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரிவிக்கப்படாத நிலையில், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் முதல் ஒன்றரை நாட்களுக்குள் மீண்டும் இணைய சேவை புதுப்பித்து வழங்கப்படுகிறது. White House Confirms Houthi Against Attack: ஹவுதிக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்; வெள்ளை மாளிகை அறிவிப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)